Share on Social Media


நரம்பியல் அறுவை சிகிச்சை மருத்துவரான கதாநாயகனுக்கு ஒரு குறிப்பிட்ட நாள் மீண்டும் மீண்டும் நிகழ்கிறது. அதிலிருந்து வெளியே வருவதற்கு அவர் எடுக்கும் எல்லா முயற்சிகளும் தோல்வியில் முடிகின்றன. அதற்கு முன்பாக, ஒரு பக்கம் ஒரு விண்கல் பூமியை நோக்கி வருகின்றது. இன்னொரு பக்கம் ஒரு ஏலியன் கும்பல் ஒரு விநோத வாகனத்தைச் சென்னையில் பார்க்கிங் செய்து வைத்திருக்கிறது. இன்னொரு பக்கம் ஒருவர் பெண்களைக் கடத்திக்கொண்டு இருக்கிறார். இன்னொருபக்கம் நாயகி தனக்கென ஒரு பிரச்னையை உருவாக்கி வைத்திருக்கிறார். இன்னொரு பக்கம் ஒரு குழந்தைக்கு உயிர் காக்கும் அறுவை சிகிச்சை ஒன்றை செய்ய வேண்டியதிருக்கிறது. இப்படிப் பக்கத்துக்குப் பக்கம் இருக்கும் பிரச்னைகளை எப்படி நாயகன் தீர்த்துவைக்கிறார் என்பதை டைம் லூப்பில் ஓட வைத்திருக்கிறார் அறிமுக இயக்குநர் மனோ கார்த்திகேயன்.

ஜாங்கோ

டைம் லூப் கான்செப்ட்டில் ஹாலிவுட்டில் பல படங்கள் வந்திருக்கின்றன. அவற்றில் சில படங்களை Filmography எனப் படத்தின் இறுதியில் போடுகிறார்கள். அந்தப் பெருந்தன்மைக்குப் பாராட்டுக்கள். கான்செப்ட்டை மட்டும் வைத்து ஒரு படத்தை எந்தவொரு படத்தின் காப்பி என்றும் சொல்லிவிடமுடியாது. டைம் லூப் படங்கள் என்றால் ஒரு குறிப்பிட நேரத்துக்குள் உலகம் மீண்டும் மீண்டும் சுழன்று கொண்டிருப்பது. இதை மையமாக வைத்து யார் வேண்டுமானாலும் படம் எடுக்க முடியும். இந்த லூப்பில் இருந்து எப்படி வெளியே வருவது என்பதைச் சுவாரஸ்யமான திரைக்கதை கொண்டு விடை செல்வதுதான் சவால். அதில்தான் இந்தப் படங்கள் வெற்றி அடைந்திருக்கின்றன. ‘ஜாங்கோ’ சறுக்குவதும் இங்கேதான். கான்செப்டை நச்செனப் பிடித்தவர்கள் மற்ற ஏரியாக்களில் சொதப்பியிருக்கிறார்கள்.

Also Read: கடைசீல பிரியாணி விமர்சனம்: சிறுத்தையிடம் முயல் மாட்டினால் பிரியாணி யாருக்கு..?

ஏகப்பட்ட பிரச்னைகளில் எதை முதலில் தீர்ப்பது என்கிற குழப்பம் கதாநாயகனுக்கு மட்டுமல்ல, நமக்குமே வந்துவிடுகிறது. அதனாலேயே சரியான பிரச்னையைத் தேடிக் கண்டுபிடிப்பதற்குள் சோர்ந்துவிடுகிறோம். அறிமுக நாயகன் சதீஷ் குமார், நாயகி மிர்னாளினி ரவி இருவருமே நடிப்பில் பாஸ் மார்க்குக்கே கடுமையாகப் போராடுகிறார்கள். ஒரே ரியாக்‌ஷனை எவ்வளவு நேரம்தான் பார்ப்பது! இருவருக்கும் வரும் ஒரே வித்தியாசமான ரியாக்‌ஷன் கோபம் மட்டுமே. நமக்கும் தான்! டப்பிங் பிரச்னைகளும் படம் முழுக்க இருக்கின்றன. இவர்தான் எதிர்மறை கதாபாத்திரம் என முடிவான பின்னும் அவருக்கென ஸ்லோ மோஷன் வைத்து, நேரத்தைக் கடத்தி செல்லும் காட்சிகள் ஒருவித அயற்சியை உண்டுபண்ணுகிறது. அவர் செய்யும் விஷயங்களும், ‘என்னதான் சயின்ஸ் ஃபிக்ஷன்னாலும் ஒரு நியாயம் வேண்டாங்களா!’ என்று கேட்க வைக்கிறது.

jango review Tamil News Spot
ஜாங்கோ

டாக்டர் நாயகனின் நண்பர்களாகக் கருணாகரன், ரமேஷ் திலக். வீட்டில் வேலை செய்யும் பெண்ணாகத் தீபா. விஞ்ஞானியாக இயக்குநர் வேலு பிரபாகரன். இன்னொரு மருத்துவராக ஹரிஷ் பேரடி. கதாநாயகியின் தோழியாக அனிதா சம்பத். அதே அலுவலகத்தில் வேலை பார்க்கும் நபராக டேனி போப். கோபம் வருவது போல காமெடி செய்வதை இப்படத்திலும் தொடர்ந்திருக்கிறார் டேனி. தீபாவுக்கு அதே வேலைதான். பழைய ஜோக் தங்கதுரைக்கு வழக்கம் போலப் பழைய ஜோக்குகளை சொல்லும் வேடம்.

Also Read: சபாபதி விமர்சனம்: சந்தானம் கவுன்ட்டரே கொடுக்காத காமெடி படம்… ஃபீல்குட் டிராமாதான், ஆனாலும்..!

டெக்னிக்கல் டிபார்ட்மெண்ட்டில் இசை ஜிப்ரான் எனப் போட்டிருக்கிறது. பின்னணி இசையில் மட்டும் ஆங்காங்கே ஜிப்ரான் தெரிகிறார். டைம்லூப் கான்செப்டை எடுத்துக்கொண்டு, அதில் ஓராயிரம் பிரச்னைகளை சொருகி, சுவாரஸ்யம் இல்லாத திரைக்கதை அமைத்து, நடிகர்களின் சிறப்பான பங்களிப்பும் இல்லாமல், பார்க்கும் பார்வையாளர்களையும் லூப் மோடில் வைத்து அயர்ச்சியை உண்டாக்குகிறது படம்.

Jnago 3 Tamil News Spot
ஜாங்கோ

தமிழ் சினிமாவில் ஒரு புதிய களம் என்ற ஒற்றை காரணம் மட்டுமே ஜாங்கோவின் ப்ளஸ்ஸாக இருக்கிறது. அதைத் தவிர மற்ற எல்லா டிபார்ட்மென்ட்டிலும் தடுமாற்றமே!Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *