Share on Social Media


புதுச்சேரி : மருத்துவம், பொறியியல், கலை, அறிவியல் உள்ளிட்ட பட்டப்படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்பங்களைஆன்-லைனில் வழங்குவதற்கான ஆயத்தப் பணிகளை சென்டாக் நிர்வாகம் வேகப்படுத்தி உள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் மருத்துவம், பொறியியல், கலை, அறிவியல் கல்லுாரிகளில் அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான மாணவர் சேர்க்கை, ‘சென்டாக்’ மூலம் நடத்தப் பட்டு வருகிறது. விண்ணப்பம் வினியோகம், கவுன்சிலிங் ஆகியவை ஆன்லைன் வாயிலாகவே நடத்தப்பட்டு வருகிறது.இந்நிலையில், 2021-22ம் கல்வியாண்டுக்கான பிளஸ் 2 தேர்வு முடிவு, கடந்த 19ம் தேதி வெளியானது. புதுச்சேரி, காரைக்காலில் மொத்தம் 14,674 பேர் தேர்ச்சி பெற்றனர். அவர்களுக்குத் தேர்வு மதிப்பெண் வெளியிடப் பட்டுள்ளது.

அதையடுத்து, உயர்கல்வி சேர்க்கைக்கு, சென்டாக் மூலம் விண்ணப்பங்கள் எப்போது வினியோகிக்கப்படும் என, மாணவர் மற்றும் பெற்றோர் எதிர்பார்ப்பில் உள்ளனர். ஆனால், அதுபற்றிய அறிவிப்பை இதுவரை சென்டாக் நிர்வாகம் வெளியிடவில்லை.காரணம் என்ன:புதுச்சேரி, காரைக்கால் பிராந்தியத்தில் தமிழ்நாடு கல்வி பாடத்திட்டம் பின்பற்றப் படுகிறது. மாகி பிராந்தியத்தில் கேரளா மாநில பாடத்திட்டமும், ஏனாமில் ஆந்திரா மாநில பாடத்திட்டமும் பின்பற்றப் படுகிறது.புதுச்சேரி, காரைக்கால், மாகி ஆகிய மூன்று பிராந்தியங் களுக்கும் பிளஸ் 2 ரிசல்ட் வெளியாகி விட்டது.

ஆனால், ஆந்திரா மாநில கல்வி திட்டத்தை பின்பற்றும் ஏனாம் பிராந்தியத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவு இன்னும் வெளியாகவில்லை.அதேபோல, சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 ரிசல்ட் இன்னும் வெளியாகாமல் உள்ளது.இதுபோன்ற சூழ்நிலையில், ஆன்-லைனில் சென்டாக் விண்ணப்பம் வினியோகம் செய்தால், ரிசல்ட் கிடைக்காத மாணவர்கள் மத்தியில் தேவையற்ற பதற்றம் ஏற்படும்.இதன் காரணமாகவே, சென்டாக் விண்ணப்பம் வழங்கப்படாமல் உள்ளது.இருப்பினும் ஆன்லைனில் விண்ணப்பம் வினியோகிக்க தேவையான ஆயத்தப் பணிகளை சென்டாக் நிர்வாகம் முடுக்கி விட்டுள்ளது.

இது குறித்து சென்டாக் அதிகாரிகள் கூறும்போது, எம்.பி.பி.எஸ்., உள்ளிட்ட தொழில்படிப்புகளில் நிர்வாக இடங்களுக்கு சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 முடித்த மாணவர்கள் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆண்டுதோறும் விண்ணப்பிக்கின்றனர்.அவர்கள் விண்ணப்பிக்க வாய்ப்பளிக்கும் வகையில், மத்திய இடைநிலை கல்வி வாரியத்தை தொடர்பு கொண்டு சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு முடிவுகள் குறித்து கேட்டறிந்து வருகிறோம்.ஓரிரு தினங்களில் சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு முடிவு குறித்த அறிவிப்பு வெளியாகி விடும் என எதிர்பார்க்கிறோம்.

அதனால், ஆன்-லைன் சென்டாக் விண்ணப்பம் வழங்கும் தேதி குறித்த அறிவிப்பு இந்த வாரத்தில் இறுதியாகிவிடும்’ என்றனர்.சென்டாக் நிரப்பும் இடங்கள் எத்தனைஎம்.பி.பி.எஸ்., உள்ளிட்ட தொழில் படிப்புகளில் 5,464 இடங்கள் சென்டாக் மூலம் நிரப்பப்பட உள்ளன. இது மட்டுமின்றி, கலை, அறிவியல் கல்லுாரிகளில் 4,260 இடங்கள், நுண்கலை படிப்புகளில் 90 இடங்களும் நிரப்பப்பட உள்ளது.லேட்ரல் என்ட்ரி இன்ஜினியரிங் படிப்பில் 426, உயிரியல் சார்ந்த டிப்ளமோ படிப்புகளில் 175 இடங்களும் சென்டாக் வாயிலாக நிரப்பப்படுகிறது. மொத்தம் 10,415 இடங்கள் சென்டாக் மூலம் ஆண்டுதோறும் நிரப்பப்படுகின்றன.

Advertisement



Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *