Share on Social Media


வாஷிங்டன்: ஜப்பான், இலங்கையில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் அந்நாடுகளுக்கு செல்ல வேண்டாம் என தனது நாட்டு மக்களுக்கு அமெரிக்கா அறிவுறுத்தி உள்ளது. இதுதொடர்பாக அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு மையம் வெளியிட்ட அறிவுறுத்தலில், ‘ஜப்பான் செல்ல வேண்டிய தேவை இருக்கும் பட்சத்தில் தடுப்பூசியை செலுத்திக் கொண்டிருக்க வேண்டும். ஜப்பானில் தற்போதைய சூழலில், தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் கூட உருமாறிய கொரோனாவை பரப்ப வாய்ப்பு உள்ளது’ என எச்சரித்துள்ளது. ஜப்பானில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க சில வாரங்களே எஞ்சியிருக்கும் நிலையில் தொற்று பரவல் அங்கு அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே, கொரோனா பாதிப்பு காரணமாக டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் ஓராண்டு ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *