Share on Social Media



டோக்கியோ: ஜப்பானில் உள்ள இஷினோமகியில் நேற்று காலை பயங்கர பூகம்பம் ஏற்பட்டது. இதன் காரணமாக வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின. பல இடங்களில் சுற்றுச்சுவர்கள் இடிந்து விழுந்தது. அச்சமடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறினார்கள். இதன் காரணமாக, மக்களிடையே பீதி ஏற்பட்டது. டோக்கியோவிலும் இந்த பூகம்பத்தின் அதிர்வு உணரப்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இந்த பூகம்பம் 6.8 புள்ளிகளாக பதிவானது. மியாக்கியில் 47 கிமீ ஆழத்தில் இதன் மையம் இருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பூகம்பத்தால் ஏற்பட்ட சேதவிவரங்கள் குறித்து உடனடியாக எந்த தகவலும் இல்லை. சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை. எனினும், பூகம்பத்தால் ஏற்பட்ட கட்டிட இடிபாடுகளில் சிக்கி 3 பேர் காயம் அடைந்தனர். உள்ளூர் ரயில் சேவையும் நிறுத்தப்பட்டது.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *