Share on Social Media

புதுடில்லி: டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கும் விளையாட்டு நட்சத்திரங்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உட்பட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.

ஜப்பானின் டோக்கியோவில் நேற்று 32வது ஒலிம்பிக் போட்டி துவங்கியது. இந்தியா சார்பில் 127 வீரர், வீராங்கனைகள், 18 வகையான போட்டிகளில் களமிறங்குகின்றனர். இவர்கள் பதக்கம் வென்று சாதிக்க ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்ட ‘டுவிட்டர்’ செய்தியில்,‘ ஒட்டுமொத்த தேசத்தின் நம்பிக்கையும், பிரார்த்தனையும் டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கும் உங்களுடன் தான் உள்ளன. இந்தியர்கள் சார்பில் உங்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். சிறப்பாக செயல்பட்டு, பதக்கங்கள் வென்று, இந்தியாவுக்கு பெருமை சேர்ப்பர் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது,’ என தெரிவித்துள்ளார்.

 

பிரதமர் மோடி வெளியிட்ட ‘டுவிட்டர்’ செய்தியில்,‘டோக்கியோ ஒலிம்பிக், பாராலிம்பிக் போட்டிகள் ஜப்பானுக்கும், பிரதமர் சுகாவிட்டருக்கும் சிறப்பாக அமைய வாழ்த்துகிறேன். உலகின் சிறந்த விளையாட்டு நட்சத்திரங்களின் நம்பமுடியாத சாதனைகளை எதிர்பார்த்திருக்கிறோம்,’ என தெரிவித்துள்ளார்.

 

Advertisement

Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *