Share on Social Media


என்னுடைய தோழி ஒருவருக்கு சோப்பை சாப்பிடும் பழக்கம் இருந்தது. நண்பர்கள் வட்டாரத்தில் இதை வைத்து அந்தத் தோழியைக் கேலி, கிண்டல் செய்வது வழக்கம். “உன் கல்யாணத்துக்கு ரெண்டு பெட்டி சோப் வாங்கி கிஃப்ட் கொடுத்திடுறோம்” என்றெல்லாம் பேசுவோம்.

டால்கம் பவுடர், பசை, மண், அடுப்புக் கரி, சாம்பல் போன்ற விநோதமான பொருள்களைச் சாப்பிடும் குழந்தைகள், பெரியவர்கள் எனப் பலரை நமக்குத் தெரிந்திருக்கலாம். உணவு அல்லாத பிற பொருள்களை உட்கொள்ளும் பழக்கம் பிகா சிண்ட்ரோம் (Pica syndrome) எனப்படும் ஒருவித குறைபாடு என்கிறது மருத்துவ அறிவியல்.

Soap (Representational Image)

Soap (Representational Image)
Photo: Unsplash

பிகா சிண்ட்ரோம் பற்றி விளக்குகிறார் சிவகாசியைச் சேர்ந்த அரசு மனநல மருத்துவர் நிஷாந்த் ரவிச்சந்திரன்.

“எந்த விதமான ஊட்டச்சத்தும் இல்லாத, உணவு அல்லாத பிற பொருள்களைச் சாப்பிடுவதுதான் பிகா சிண்ட்ரோம். ஊட்டச்சத்து இல்லாத பொருள்கள் எனும்போது பேப்பர், மண், கற்கள், க்ரேயான்ஸ், துணி, ரப்பர் பேண்ட், பட்டன் இதுமாதிரியான பொருள்களும் அடங்கும். சிறிய வயதில் நம்மில் பலர் சிலேட் குச்சிகளைச் சாப்பிட்டிருப்போம். அதுவும் இதே பிரச்னைதான். இந்தப் பிரச்னை குறிப்பாக குழந்தைகளிடமும், கர்பிணிகளிடமும்தான் அதிகமாகக் காணப்படுகிறது.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *