Share on Social Media


மும்பை: ஐக்கிய முற்போக்கு கூட்டணி என ஒன்று தற்போது இல்லை என மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் நடந்த மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் அமோக வெற்றி பெற்று திரிணமுல் காங்கிரஸ் ஆட்சியை பிடித்ததை தொடர்ந்து, அக்கட்சி தலைவரும், முதல்வருமான மம்தா தேசிய அளவில் கட்சியை விரிவுபடுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதனை தொடர்ந்து, காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் அக்கட்சியில் இருந்து விலகி, திரிணமுல் காங்கிரசில் இணைந்து வருகின்றனர். இதனால், இரு கட்சிகளுக்கு இடையே பனிப்போர் நிலவுகிறது.

இந்நிலையில், மஹாராஷ்டிரா தலைநகர் மும்பைக்கு வந்துள்ள மம்தா, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை சந்தித்து பேசினார்.

மாற்று அணி முக்கியம்

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், தற்போது நடக்கும் சர்வாதிகார ஆட்சியை எதிர்க்க ஒருவரும் இல்லை. இதனால், மாற்று அணி உருவாக்கப்பட வேண்டும். சரத்பவார், மூத்த தலைவர். அரசியல் நிலவரம் குறித்து ஆலோசனை நடத்தினேன். சரத்பவார் கூறியதை நான் ஏற்று கொள்கிறேன். தற்போது ஐக்கிய முற்போக்கு கூட்டணி என ஒன்றும் இல்லை. வரலாற்றில் தான் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

latest tamil news

ஒன்று சேர வேண்டும்

சரத்பவார் கூறுகையில், காங்கிரசாக இருந்தாலும் சரி அல்லது வேறு கட்சியாக இருந்தாலும் சரி, பா.ஜ.,வை எதிர்ப்பதில் ஒன்று சேர்ந்தால், அவர்களை நாங்கள் வரவேற்போம். இன்றைய சூழ்நிலையில், ஒத்த எண்ணங்களை கொண்ட கட்சிகள் ஒன்று சேர்ந்து, ஆக்கப்பூர்வமான தலைமையை ஏற்படுத்துவதே மம்தாவின் நோக்கம். வலிமையான மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். தற்போதைய சூழல் குறித்து மட்டும் நாங்கள் ஆலோசிக்கவில்லை. தேர்தல் குறித்தும் சிந்தித்தோம். இந்த நோக்கத்திற்காகவே மம்தா வந்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

கனவு

latest tamil news

முன்னதாக மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட மம்தா பேசும்போது, மாநில கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்தால், மத்தியில் ஆளும் பா.ஜ.,வை எளிதில் வீழ்த்திவிடலாம் எனக்கூறினார்.

latest tamil news

இதற்கு பதிலளித்துள்ள காங்கிரஸ் பொது செயலர் வேணுகோபால், இந்திய அரசியலின் உண்மையான நிலவரத்தை அனைவரும் அறிவார்கள். காங்கிரஸ் இல்லாமல், பா.ஜ.,வை தோற்கடித்த விட முடியும் எண்ணினால், அது கனவாகவே முடியும் எனக்கூறினார்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *