Share on Social Media


திருவனந்தபுரம்: எதிர்க்கட்சிகள் என்பதால் மட்டும் அரசின் அனைத்து விஷயங்களையும் எதிர்க்கவில்லை. சாமான்ய மக்களை பாதிக்கும் அனைத்து கொள்கைகளையும் எதிர்க்கிறோம் என ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே தெரிவித்துள்ளார்.

ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவராக இருந்த குலாம் நபி ஆசாத், கடந்த 15ம் தேதி ஓய்வு பெற்றார். இதையடுத்து, புதிய எதிர்க்கட்சி தலைவராக, மல்லிகார்ஜூன கார்கே நியமிக்கப்பட்டார்.

திருவனந்தபுரத்தில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: நாங்கள் எதிர்க்கட்சிகள் என்பதால் மட்டும் அரசின் அனைத்து விஷயங்களையும் எதிர்க்கவில்லை. சாமான்ய மக்களை பாதிக்கும் தவறான கொள்கைகளையும் நாங்கள் எதிர்க்கிறோம். இதில் நாங்கள் சமரசம் செய்து கொள்ள போவதில்லை. பார்லிமென்டில் பல்வேறு மக்கள் பிரச்னைகளை எழுப்புவது விளம்பரத்திற்காக அல்ல. அது சாமானிய மக்களை பாதிப்பதால், அந்த விவகாரங்களை எழுப்புகிறோம். சாமானிய மக்களின் பிரச்னைகள் மீது அதிக அக்கறை செலுத்துங்கள். அதைப்பற்றி பேசி அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள் என, இந்த பதவியை கொடுக்கும் போது என்னிடம் சோனியாவும், ராகுலும் தெரிவித்தனர்.

சர்ச்சைக்குரிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெற்று, அதை பார்லி., நிலைக்குழுவின் ஆய்வுக்கு அனுப்பி வைக்க வேண்டும். குறைந்தபட்ச ஆதார விலை மற்றும் விவசாய உற்பத்தி பொருளை விற்பனை செய்யும் மண்டிக்களை அழித்து விடும் என்பதால், அந்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகளின் கோரிக்கையை நாங்கள் ஆதரிக்கிறோம்.
விவசாயிகளை திருப்தி படுத்த மத்திய அரசு தவறிவிட்டது. இதனால், அந்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும். ‛‛காலிஸ்தான்” என முத்திரை குத்தி, போராட்டத்தில் உள்ள விவசாயிகளிடம் பிளவை ஏற்படுத்த அரசின் அனைத்து இயந்திரங்களும் முயற்சி செய்கின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *