Share on Social Media


சென்னை: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தனது பேஸ்புக் பதிவில் கூறியிருப்பதாவது: இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியின் பிறந்தநாளில், அவர் நல்ல உடல்நலத்தோடும் மகிழ்ச்சியோடும் திகழ எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். நமது முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் மறைவுற்ற இவ்வேளையில், பிறந்தநாள் கொண்டாட்டங்கள் வேண்டாம் எனும் அவரது முடிவு முதிர்ச்சியையும் நாட்டின் மீது அவர் கொண்டுள்ள ஈடுபாட்டுணர்வையும் காட்டுகிறது. அதனை நான் பெரிதும் மதிக்கிறேன். இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *