Tamil News large 2639546 Tamil News Spot
Share on Social Media

புதுடில்லி:’தேசியவாத காங்கிரஸ், எம்.பி., சுப்ரியா சுலே, 2019 லோக்சபா தேர்தலுக்கான வேட்பு மனுவில், தன் சொத்து விபரங்களை மறைத்ததாக, வருமான வரித் துறை தெரிவித்துள்ளது, பா.ஜ., அரசின் பழிவாங்கும் நடவடிக்கை’ என, காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

புகார்

தேசியவாத காங்கிரஸ் தலைவர், சரத் பவாரின் மகள் சுப்ரியா சுலே, 2019 லோக்சபா தேர்தலில், மஹாராஷ்டிராவின், பாராமதி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.அந்த தேர்தலின் போது, இவர் தாக்கல் செய்த வேட்பு மனுவில், தென் கிழக்கு ஆகிய நாடான, சிங்கப்பூரில் உள்ள இரு நிறுவனங்களில், அவரது கணவர் சதானந்த் சுலேவுக்கு இருந்த சொத்து விபரங்களை மறைத்ததாக, மத்திய விசாரணை அமைப்புகள் குற்றம் சாட்டின.

இது தொடர்பாக, தேர்தல் கமிஷனில் புகார் அளிக்கப்பட்டது. இது குறித்து விசாரணை நடத்தும் படி, வருமான வரித் துறை மற்றும் மத்திய நிதி துறைக்கு, தேர்தல் கமிஷன் கடிதம் எழுதியது. வருமான வரித் துறை நடத்திய விசாரணையில், இந்த குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, கறுப்பு பண சட்டத்தின் கீழ், இவ்வழக்கில் அடுத்த கட்ட விசாரணை நடத்த, வருமான வரித் துறை முடிவு செய்து உள்ளது.

நடவடிக்கை

இது குறித்து, மஹாராஷ்டிர மாநில, காங்., மூத்த தலைவர் பவன் கேரா கூறியதாவது: அமலாக்கத் துறை, சி.பி.ஐ., உள்ளிட்ட அனைத்து மத்திய விசாரணை அமைப்புகளும், பா.ஜ., தலைவர்களின் சொல்படி ஆடுவதால், நம்பகத் தன்மையை இழந்துவிட்டன.எதிர்க்கட்சிகளை அச்சுறுத்தும் உத்தியாக, பா.ஜ., அரசு கையாளும் மற்றொரு அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக தான் இதை பார்க்க வேண்டியுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார். —————————-

Advertisement

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *