Share on Social Media


நாங்கள் ஒரு சிறு நகரத்தில் வசிக்கிறோம். அப்பா, அம்மாவுக்கு நான் ஒரே பெண். நாங்கள் வசிப்பது என் தாத்தா வீட்டில் என்பதால், அப்பாவின் ஒரே தம்பியான சித்தப்பாவும் எங்களுடன் வசிக்கிறார். நான் முதுகலைப் படிப்பை முடித்துவிட்டு, உள்ளூரிலேயே பணிபுரிந்துகொண்டிருக்கிறேன்.

என் சித்தப்பாவுக்கு 45 வயதாகிறது. டிகிரி படிக்கவில்லை. 10,000 ரூபாய் சம்பளத்தில் ஒரு வேலைபார்க்கிறார். தன் செலவுகளை அந்தப் பணத்தில் சமாளித்துக்கொள்வார். அது போக மிஞ்சும் பணத்தை சேமித்துக்கொள்வார். புகை, மது என எந்தப் பழக்கமும் இல்லை.

Representational Image

Representational Image
Photo by Andrik Langfield on Unsplash

அவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. என் தாத்தா, பாட்டி உயிரோடு இருந்தவரை சித்தப்பாவுக்கு நிறைய பெண் பார்த்தார்கள். 35 வயது வரை அவருக்குப் பெண் எதுவும் அமையவில்லை என்பது உண்மைதான். ஆனால், தாத்தா, பாட்டியின் மறைவுக்குப் பிறகு, என் அப்பாவும் அம்மாவும் சித்தப்பாவுக்குத் திருமணம் செய்துவைப்பதில் ஆர்வம் காட்டவில்லை. எங்கள் உறவினர்கள் சித்தப்பாவுக்குத் திருமணம் செய்யப் பரிந்துரைக்கும் பெண்களையும், `இந்தக் குடும்பம் சரியில்லை’, `ஜாதகம் பொருந்தவில்லை’, `அந்த ஊர் நமக்கு சரிவராது’ என்று ஏதாவது ஒரு காரணம் சொல்லித் தட்டிக்கழிக்க ஆரம்பித்தார்கள்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *