Share on Social Media

“பணம் மோசடி செய்யப்பட்ட 24 மணி மணி நேரத்திற்குள் இந்த எண்ணுக்கு அழைத்து, சம்பந்தப்பட்டவர்கள் புகார் அளித்தால், அவர்களின் வங்கிக் கணக்கிலிருந்து, மோசடி நபரின் வங்கிக்கணக்குக்கு செலுத்தப்பட்ட பணத்தை அவர்கள் எடுக்காதவாறு முடக்கலாம்” என தி.நகர் சைபர் கிரைம் பிரிவு தெரிவித்துள்ளது. மேலும், வேறு ஏதேனும் சைபர் குற்றங்கள் சம்மந்தமான காவல் நிலையத்திற்கு நேரில் வராமலேயே www.cybercrime.gov.in என்ற வலைதளத்தில் புகார் அளிக்கலாம்.

புகார் தெரிவிக்கும் இணையதளம்

புகார் தெரிவிக்கும் இணையதளம்

வங்கிகள் எப்போதுமே, வாடிக்கையாளர்களின் கே.ஒய்.சி தகவல்களை, அதாவது வங்கிக் கணக்கு எண், கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு விவரங்களை போன், எஸ்.எம்.எஸ் மூலம் கேட்காது. அதனால் யாராவது உங்களின் வங்கிக் கணக்கு விவரம், ஓ.டி.பி கேட்டால் கண்டிப்பாகப் பகிர வேண்டாம். மோசடி பேர்வழிகள் காட்டும் கைவரிசையில் சிக்காமல் இருக்க ஏ.டி.எம் கார்டு பின் நம்பர் மற்றும் இன்டர்நெட் பேங்கிங் பாஸ்வேர்டுகளை அடிக்கடி மாற்றவும். மேலும், ஒரே பாஸ்வேர்டுகளை பல வலைதளங்களுக்கு பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *