anand M 18 Tamil News Spot
Share on Social Media

சென்னை: இளம் செஸ் வீரர்களுக்கு பயிற்சி தரும் வகையில், ஆனந்த் அகாடமி துவங்கினார்.

இந்திய செஸ் ‘ஜாம்பவான்’ ஆனந்த் 50. உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் ஐந்து முறை கோப்பை வென்றுள்ளார். இவர், ‘வெஸ்ட்பிரிட்ஜ் கேப்பிடல்’ நிறுவனத்துடன் இணைந்து செஸ் அகாடமி துவக்கியுள்ளார். இதில் இளம் நட்சத்திரங்களுக்கு பயிற்சி தரப்பட உள்ளது. 

இதற்கான முதற்கட்ட பட்டியலில் தமிழகத்தின் பிரக்ஞானந்தா 15, இவரது சகோதரி வைஷாலி 19, நிகால் சரின் 16, குகேஷ் 14, சாத்வானி 15, இடம் பெற்றுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் தகுதியான நட்சத்திரங்கள் கண்டறியப்பட்டு உலகத் தரவரிசையில் இடம்பெற தேவையான பயிற்சிகள் தரப்படும்.

ஆனந்த் கூறுகையில்,‘‘கடந்த 20 ஆண்டுகளில் செஸ் நன்றாக பிரபலம் அடைந்து விட்டது. இந்தியாவில் திறமையான நட்சத்திரங்கள் பலர் உள்ளனர். இவர்களுக்கு சரியான வழிகாட்டுதல் அமையும் பட்சத்தில் உலகத் தரவரிசையில் ‘டாப்–10’ பட்டியலில் இடம் பெறலாம். உலக சாம்பியனாக கூட உருவாகலாம்,’’ என்றார்.

Advertisement

Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *