Share on Social Media


சிவகங்கை: திறந்த வெளியில் மலம் கழிப்பதை தடுத்து கட்டாயம் கழிப்பறைகளை பயன்படுத்தும் வகையில் அரசால் பல திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் கிராமம் மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள பொதுக் கழிப்பறைகள், மகளிர் சுகாதார வளாகங்கள் பயன்படுத்த முடியாத நிலையில் பெரும்பாலும் பூட்டிக் கிடக்கின்றன. இதில், பல கட்டடங்கள் சேதமடைந்தும் காணப்படுகின்றன. திறந்த வெளியில் மலம் கழிப்பதை தடுக்கவும், கழிப்பறைகளை அனைவரும் பயன்படுத்தும் வகையில் ஈர்க்கும் திட்டமாக நகராட்சி தோறும் நவீன வசதிகளுடன் கூடிய ‘நம்ம டாய்லெட் ’திட்டம் கடந்த 2014ம்ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.

இதற்காக நகராட்சிகளுக்கு ரூ.10 லட்சம் நிதியும் ஒதுக்கப்பட்டது. நம்ம டாய்லெட் சிவகங்கை நகராட்சியில் மதுரை தொண்டி சாலையில் பஸ் ஸ்டாண்ட் எதிர்ப்புறம் மற்றும் கலெக்டர் அலுவலகம் அருகில் கட்டப்பட்டது. பஸ் ஸ்டாண்ட் எதிர்ப்புறம் உள்ள டாய்லெட் கடந்த 2016ம் ஆண்டு திறக்கப்பட்டது. சில மாதங்கள் மட்டும் செயல்பட்ட நிலையில் நீர் வசதி இல்லாமலும், பராமரிப்பில்லாமலும் பயன்பாடில்லாமல் போனது. கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள நம்ம டாய்லெட் கட்டியதில் இருந்தே திறக்கப்படாமல் பூட்டிக்கிடக்கிறது. பல லட்ச ரூபாய் செலவில் கட்டப்பட்ட நம்ம டாய்லெட்களை பராமரித்து, பயன்பாட்டில் கொண்டு வர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.



Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *