Share on Social Media


திருப்பூர்:சர்வதேச சந்தை வாய்ப்புகளை கைப்பற்ற வசதியாக, மதிப்பு கூட்டப்பட்ட செயற்கை நுாலிழை ஆடை உற்பத்திக்கு மாற வேண்டு மென, ஏ.இ.பி.சி., அழைப்பு விடுத்துள்ளது.இந்தியாவின் ஜவுளி ஏற்றுமதி வர்த்தகத்தில், பின்னலாடை உற்பத்தியும், ஏற்றுமதியும் பெரும் பங்களிப்பை செலுத்தி வருகின்றன.

இந்தியாவின், பொருளாதாரத்தை தீர்மானிக்கும் நகரங்கள் வரிசையில், திருப்பூரும் முக்கிய இடத்தை பெற்றுள்ளது.திருப்பூர் பின்னலாடை வர்த்தகம், கடந்த, 30 ஆண்டுகளுக்கு மேலாக, பருத்தி நுாலிழை துணியை சார்ந்தே நடக்கிறது. கடந்த, 10 ஆண்டுகளாக, செயற்கை நுாலிழை ஆடைகள் உற்பத்தி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.ஏற்றுமதி வர்த்தகம், வெளிநாட்டு வர்த்தகர்களின் விருப்பம் மற்றும் தேவைகளை பூர்த்தி செய்வதாக இருக்க வேண்டும். அந்த வகையில், மதிப்பு கூட்டப்பட்ட செயற்கை நுாலிழை ஆடைகள், சர்வதேச சந்தையை ஆக்கிரமித்துள்ளன.
மதிப்பு கூட்டப்பட்ட செயற்கை நுாலிழை ஆடைகள் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில், ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கழகமும்(ஏ.இ.பி.சி.,). கே.டி.எம்., மையமும் அதற்கான வழிகாட்டுதலை வழங்கி வருகின்றன.திருப்பூர் கே.டி.எம்., மையத்தில், புதிய தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட, செயற்கை நுாலிழை ஆடைகள் மற்றும் பின்னலாடை துணிகள் கண்காட்சி துவங்கியுள்ளது.
திருப்பூர் தொழில்துறையினர், செயற்கை நுாலிழை கண்காட்சியை பார்வையிட்டு, புதிய பாதையில் முன்னேற வேண்டுமென, ஏ.இ.பி.சி., அழைப்பு விடுத்துள்ளது.ஏ.இ.பி.சி., தலைவர் சக்திவேல் கூறியதாவது:திருப்பூர் கே.டி.எம்., மையத்தில், செயற்கை நுாலிழை ஆடை மற்றும் துணிகள், பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. தற்போதைய நிலவரப்படி, சர்வதேச சந்தையை, செயற்கை நுாலிழை ஆடைகள் தான் ஆக்கிரமித்துள்ளன.
பல்வேறு பன்னாட்டு சந்தைகளை சார்ந்துள்ள திருப்பூர் ஏற்றுமதியாளர்களும், செயற்கை நுாலிழை ஆடை உற்பத்திக்கு மாற வேண்டும். சர்வதேச அளவில், 15 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு, செயற்கை நுாலிழை ஜவுளி வர்த்தகம் நடக்கிறது.இந்தியாவின் பங்களிப்பு, 2 சதவீதம் மட்டுமே உள்ளது. சர்வதேச சந்தைகளில், நமக்கான வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன. பருத்தி நுாலிழை ஜவுளியை மட்டும் சார்ந்திருக்காமல், ஏற்றுமதியாளர்கள், மதிப்பு கூட்டப்பட்ட செயற்கை நுாலிழை ஆடை உற்பத்திக்கு மாற வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.
பல்வேறு பன்னாட்டு சந்தைகளை சார்ந்துள்ள திருப்பூர் ஏற்றுமதியாளர்களும், செயற்கை நுாலிழை ஆடை உற்பத்திக்கு மாற வேண்டும். சர்வதேச அளவில், 15 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு, செயற்கை நுாலிழை ஜவுளி வர்த்தகம் நடக்கிறது.

Advertisement



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *