Share on Social Media


`இவங்க ரெண்டு பேரும் நடிக்கிறதால அந்த விளம்பரங்கள் க்யூட்டா இருக்குதா, இல்ல அந்த விளம்பரங்கள்ல நடிக்கிறதால இவங்க க்யூட்டா மாறிடுறாங்களான்னு பிரிச்சே பார்க்க முடியல.’ மூத்த நடனக்கலைஞர்கள் சாந்தாவும் தனஞ்ஜெயனும் நடிக்கிற விளம்பரங்களைப் பார்க்கிறபோதெல்லாம் இப்படித்தான் தோன்றுகிறது.

சாந்தா தனஞ்ஜெயன்

Also Read: ‘நெடுமுடி வேணுவுக்கு மனைவியா நடிக்க பயமாகத்தான் இருந்தது” – சாந்தா தனஞ்செயன்

இரண்டு நாள்களுக்கு முன்பு, தனஞ்செயனின் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில், நடிகை நயன்தாராவுடன் இணைந்து நடித்த நகைக்கடை விளம்பரத்தில் மாலை மாற்றி குதூகலித்துக்கொண்டிருந்தார்கள் சாந்தா தனஞ்ஜெயன் தம்பதியர். “இது எப்போ” என்றோம். “கொரோனாவுக்கு முன்னாடியே இந்த விளம்பரத்துல நடிச்சிட்டோம். ஆனா, எப்போ ரிலீஸாச்சுன்னும் தெரியலை, மறுபடியும் இந்த விளம்பரத்தை ஒளிபரப்பு செய்யுறாங்களான்னும் தெரியலை. ஆனா, கடந்த ஒரு வாரமா நிறைய பேர் போன் போட்டு, `நயன்தாரா கூட நடிச்ச எக்ஸ்பீரியன்ஸ் எப்படி இருந்துச்சு’ன்னு விசாரிக்கிறாங்க” என்ற தனஞ்ஜெயனைத் தொடர்ந்து பேச ஆரம்பித்தார் சாந்தா.

“சீமந்தம், காதுகுத்து, அறுபதாம் கல்யாணம்னு பல விசேஷங்கள் அந்த விளம்பரத்துல வரும். குழந்தைகளோடு விளையாடுறது, கர்ப்பிணியைக் கொஞ்சுறது, `எங்கே என் செல்லக்குட்டி’னு நான் டயலாக் சொன்னவுடன் ஓடி வந்து என்னைக் கட்டிக்கிறதுன்னு நயன்தாரா ரொம்ப வேகமா நடிக்கிறாங்க. அதே நேரம் அவ்ளோ இயல்பாவும் நடிக்கிறாங்க. சினிமா ஃபீல்டுல அவங்க சீனியர் இல்லையா” என்று சிலாகித்தவர், இயக்குநர் வசந்தபாலனின் இன்னும் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிற அனுபவத்தையும் பகிர்ந்துகொண்டார்.

2a6cac28 782f 494f bcb9 f810959e9c53 Tamil News Spot
வசந்தபாலனுடன் ஷூட்டிங் ஸ்பாட்டில்

“அந்தப் படத்துல எனக்கு ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் கேரக்டர். வாழ்க்கையில எல்லாம் இருந்தும் வெறுமையில இருக்கிற எனக்கும் ஹீரோயினுக்கு நடுவுல ஏற்படுற பந்தம்தான் கதை. ஹீரோயினோட காதலைத் தடுக்கிற கேரக்டர். அதனால என்னோட ரோல் கொஞ்சம் கடுமையா இருக்கும்.

வீட்டுக்கு வந்து என்னோட கேரக்டர்பத்தி விளக்கமா சொல்லிக்கொடுத்தார் வசந்தபாலன். கொரோனாவுல ரொம்ப பாதிக்கப்பட்டு மீண்டு வந்திருக்கார். ரொம்ப அன்பான, மரியாதையான மனிதர். அந்த யூனிட்ல எல்லாருமே ரொம்ப இனிமையா பழகுறாங்க. இன்னும் ரெண்டு, மூணு நாள்ல ஷூட் முடியப்போகுது. படம் வந்ததும் பார்த்துட்டு சொல்லுங்க” என்கிறார் மலர்ந்த முகத்துடன்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *