Share on Social Media


தொடர்ந்து பேசிய முதல்வர், “சென்னை மாநகராட்சி சார்பில் காலை, மதியம், இரவு நேரங்களில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. ரெட் அலர்ட் கொடுத்திருப்பதையும் மனதில் கொண்டு தான், முதலமைச்சர் என்ற முறையில் நானே எல்லா இடங்களுக்கும் சென்று ஆய்வு நடத்திவருகிறேன். அதேபோன்று, அமைச்சர்களும் ஆய்வு நடத்திவருகிறார்கள். மற்ற மாவட்டங்களிலும் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகளோடு இணைந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றார்கள்” என்றார்.

முதல்வர் ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலின்

ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளது என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டை எப்படிப் பார்க்கிறீர்கள் என்ற கேள்விக்கு, “அவர் பொய் சொல்லவே பிறந்திருக்கிறார். இப்படி தான் தேர்தல் நேரத்திலும் பொய் சொல்லிக்கொண்டிருந்தார். தேர்தலுக்குப் பிறகு பெரும் தோல்வியைச் சந்தித்திருக்கிறார். அந்த வெறுப்பிலும், திமுக இவ்வளவு வேகமா வேலைபார்க்கிறது என்ற கடுப்பிலும், திடீரென்று வந்து ஒரு ஷோ காண்பித்துக்கொண்டு இப்படியெல்லாம் சொல்லிக்கொண்டிருக்கிறார்” என்றார்.

எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி

எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி

தொடர்ந்து பேசியவர், “அவர் அப்படி தான் செய்வார், அவர் வேலை அவ்வளவு தான். அதை பற்றியெல்லாம் நாங்கள் கவலைப்படமாட்டோம். எங்களின் வேலை மக்கள் பணி. நேரடியாக மக்களைச் சந்திக்கிறோம். மக்களின் குறைகளைக் கேட்டு அந்த குறைகளுக்கு உடனடி தீர்வு ஏற்படுத்துகின்றோம். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் மீது நிச்சயமாக உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *