587288 Tamil News Spot
Share on Social Media

அதைத்தொடர்ந்து, சில பஞ்சாயத்துகளிலும் தலையிட்டிருந்ததால் அவருக்கு எதிரிகளும் அதிமாகினர். இதனால், லைசென்ஸ் பெற்று கைத்துப்பாக்கியையும் வைத்திருந்தார் என்று சுட்டிக்காட்டும் போலீஸார், சி.சி.டி.வி கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை வைத்து விசாரணையைத் தீவிரப்படுத்தினர். இந்தச் சூழலில், வழக்கறிஞர் ராஜேஷ் கொலையில் தொடர்புடைய ரௌடி கும்பலைச் சேர்ந்த 8 பேர், திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நீதிமன்றத்தில் இன்று சரணடைந்தனர்.

சரணடைந்த ரௌடி கும்பல்

சரணடைந்த ரௌடி கும்பல்

சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த முருகேசன், அருண், ருக்கேஷ்வரன், சஞ்சய், கும்பகோணத்தைச் சேர்ந்த ரமேஷ், ஸ்ரீநாத், திருநெல்வேலியைச் சேர்ந்த வைரமணி, திருவள்ளூரைச் சேர்ந்த கிஷோர்குமார் ஆகியோர் என்பது தெரியவந்தது. இந்த 8 பேர் தரப்பில் சுந்தரமூர்த்தி என்ற வழக்கறிஞர் ஆஜராகினார். முதற்கட்ட விசாரணையில், முன்விரோதம் காரணமாக வழக்கறிஞர் ராஜேஷை கொன்றது தெரியவந்துள்ளது. இதையடுத்து, 8 பேரையும் வரும் 9-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி காளி முத்துவேல் உத்தரவிட்டார். கொரோனா பரிசோதனைக்கு பின்னர் 8 பேரும் வாணியம்பாடி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *