Share on Social Media

கிரிக்கெட்டோ, கால்பந்தோ இல்லை வேறு விளையாட்டுகளோ நாம் பார்த்து மட்டுமே வளர்வதில்லை. கண்கள் மட்டுமே அதைக் கொண்டாடுவதில்லை. விளையாட்டுகளை கேட்டும் ரசித்திருக்கிறோம். கபில் தேவின் கேட்ச், மரடோனாவின் கோல், ஹோல்டிங்கின் பௌன்சர், பீலேவின் பைசிக்கிள் கிக்… இவையெல்லாம் யாரோ ஒருவர் சொல்லக்கேட்டே சிலாகித்திருப்போம். விளையாட்டைப் பொறுத்தவரை, கண்களை விட செவிகள் சீக்கிரம் ஈர்க்கப்பட்டுவிடும். அதனால்தான், வீரர்களை விமர்சிக்கும் வர்ணனையாளர்களைக்கூட நாம் விமர்சிக்கிறோம்.

”தோனி ஃபினிஷஸ் ஆஃப் இன் ஸ்டைல்” என்ற ரவி சாஸ்திரியின் குரலுக்கு இங்கு எத்தனை ரசிகர்களோ இருக்கிறார்களோ, அதே அளவுக்கு ”களம் ஒண்ணுல சண்டை ஒன்றரை நிமிஷத்துல முடிஞ்சே போச்சுங்க. கருப்போட சேவல் பெங்களூர் ராமச்சந்திரா சேவலா கொண்டே போடுச்சு” என்ற அல்வா வாசுவின் குரலுக்கும் ரசிகர்கள் உண்டு. ”அவர் பந்தைப் பிடிக்கவில்லை. பந்துதான் அவரைப் பிடித்தது” என்ற படவா கோபியின் கமென்டரியை எல்லோரும் ஒருமுறையாவது விளையாடும்போது சொல்லியிருப்போம்! நம் ஊரில் நடக்கும் போட்டிகளில் மைக் பிடிப்பவர்களின் குரல்கள் எல்லோரையும் கட்டிப்போட்டுவிடும். அந்தப் போட்டி மீதான ஆர்வத்தை பலமடங்கு அதிகரித்துவிடும். அப்படி சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் நடந்த கால்பந்து போட்டிகளின் குரலாக இருந்தவர்தான் மைக் மனோ என்கிற மனோகர்.

Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *