Share on Social Media


சென்னை:  எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில துணைத் தலைவர் அம்ஜத் பாஷா வெளியிட்ட அறிக்கை: 2019ம் ஆண்டு சென்னை ஐ.ஐ.டி.யில் படித்து வந்த எம்.ஏ. முதலாமாண்டு மாணவி பாத்திமா லத்திப் மரணம் தொடர்பாக புதிய விசாரணைக் குழு அமைத்து விசாரணை மேற்கொள்ள வேண்டும். மாணவி பாத்திமா லத்திப் தனது மரணத்திற்கு தனது துறையை சேர்ந்த பேராசிரியர் சுதர்சன் பத்மநாபன் தான் காரணம் என தனது மொபைலில் குறிப்பு எழுதியுள்ள நிலையிலும் பேராசிரியர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரியவில்லை. இந்த வழக்கு சிபிஐ வசம்  ஒப்படைக்கப்படுவதாக செய்திகள் வெளியாயின. எனினும் தற்போது வரை வழக்கின் நிலை என்ன என்பது தெரியவில்லை. ஆகவே, தமிழக அரசு மாணவி பாத்திமா லத்திபின் மரணம் தொடர்பாக புதிய விசாரணைக் குழுவை அமைத்து, மாணவி குறிப்பிட்ட பேராசிரியர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *