Share on Social Media


‘இவரை நீதிபதியாகத் தேர்வு செய்தால், நல்லவிதமாகத் தீர்ப்பு கொடுப்பாரா’ என்ற நீதி சார்ந்த பார்வையில்தான் சம்பந்தப்பட்ட நபர்களைத் தேர்ந்தெடுத்து பரிந்துரை செய்கிறது கொலிஜியம் அமைப்பு. அப்படிப் பரிந்துரை செய்யப்பட்ட நபர் நேர்மையானவரா, அவர்மீது குற்ற வழக்கு ஏதேனும் உள்ளதா என்பதையெல்லாம் சட்ட அமைச்சகம்தான் பார்க்கவேண்டியிருக்கிறது. கொலிஜியம் பரிந்துரைக்கும் நபர் மீது ஏதேனும் வழக்குகள் இருந்து, அவரது நேர்மை குறித்து சந்தேகம் ஏற்பட்டால்கூட சட்ட அமைச்சகம் அது குறித்து கருத்துதான் சொல்ல முடியுமே தவிர… `இவரை நியமனம் செய்யக் கூடாது’ என்று உத்தவிட முடியாது. மாறாக கொலிஜியம் அமைப்பு, தன் பரிந்துரையைச் செயல்படுத்துவதில் உறுதிகாட்ட முடியும்.

உதாரணமாக, கடந்த அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில், சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்த ஒருவரை, இன்றைய தி.மு.க அரசு வேறு ஒரு துறைக்கு மாற்றம் செய்ததாக வைத்துக்கொண்டால், ‘இதன் பின்னணியில் அரசியல் இருக்கிறது’ என்று நாம் வேண்டுமானால் கிசுகிசு பேச முடியும். ஆனால், ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி, எங்கே வேலை கொடுத்தாலும் செய்ய வேண்டும் என்றுதான் சட்டம் சொல்கிறது. எனவே, சட்டப்படி இந்த நடவடிக்கை சரியானதுதான்.

உச்ச நீதிமன்றம்

உச்ச நீதிமன்றம்

எனக்குத் தெரிந்தவரையில், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான 10% இட ஒதுக்கீடு விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்துவரும்போது, ‘10% இட ஒதுக்கீடு குறித்த வழக்கு எதையும் நாடு முழுவதும் யாரும் எடுத்து விசாரிக்கக் கூடாது’ என்று உச்ச நீதிமன்றமே சொல்லியிருந்தது. ஆனால், சென்னை உயர் நீதிமன்றத்தில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீடு குறித்த வழக்கின்போது, 10% இட ஒதுக்கீட்டுக்கு தடை உத்தரவைப் பிறப்பித்தார் சஞ்ஜிப் பானர்ஜி. இதுகூட உச்ச நீதிமன்றத்திலுள்ள கொலிஜியம் நீதிபதிகளுக்கு ஆட்சேபத்தை ஏற்படுத்தியிருக்கலாம். அதன் தொடர்ச்சியாக இப்படியொரு நடவடிக்கையைக் கையாண்டிருக்கலாம். உண்மை என்னவென்று கொலிஜியத்துக்கு மட்டுமே தெரியும்.

அதேபோல், சஞ்ஜிப் பானர்ஜி எழுதிய கடித வரியையும் சிலர் இங்கே சர்ச்சையாக்கிவருகிறார்கள். அதில், ‘சாரி… பல நேரங்களில் உங்களின் வேலை நேரத்தையும் தாண்டி நான் உங்களிடம் வேலை வாங்கியிருக்கிறேன். நான் சொல்கிற நேரத்தில் நீங்கள் வேலை செய்ய வேண்டும் என்ற இந்த ஆதிக்க உணர்வை என்னால்கூட உடைக்க முடியவில்லை. நானேகூட அதைச் செயல்படுத்திவிட்டேன்’ என்று தன் கீழ் பணிபுரிந்த ஊழியர்களுக்குத்தான் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

இந்தியாவிலுள்ள எந்தவொரு நீதிமன்றமும் ஒன்றுக்கொன்று குறைந்தது இல்லை. பணி இடமாற்றம் செய்யப்படுவதால், சம்பந்தப்பட்டவர்களின் பொருளாதார நிலையிலும் எந்த மாற்றமும் ஏற்படப்போவது இல்லை. அடுத்து நீதிமன்றப் பணிகளுக்கு வரும்போதே, நீதி அமைப்பின் சட்டதிட்டங்களுக்கு உட்படுகிறேன் என ஒப்புதல் கொடுத்துத்தான் பணிக்கு வருகிறார்கள். எனவே, இது போன்ற நடவடிக்கைகளின்போது அதன் பின்னணியில் அரசியல் சாயம் பூசுவது தேவையற்ற ஒன்று” என்கிறார் அழுத்தமாக.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *