Share on Social Media


சென்னை-சென்னையில், 214 போலீஸ் இன்ஸ்பெக்டர்களை பணியிட மாற்றம் செய்து, மாநகர கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

தமிழக சட்டசபை தேர்தலையொட்டி, மூன்று ஆண்டுகள் ஒரே காவல் நிலையம் உள்ளிட்ட இடங்களில் பணிபுரிந்த, டி.எஸ்.பி.,க்கள் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் ஏராளமானோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.தேர்தல் முடிந்து புதிய அரசு ஆட்சிப் பொறுப்பேற்றதும், பணியிட மாறுதல் செய்யப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மீண்டும், ‘வளமான’ இடங்களை பிடிக்க, அரசியல்வாதிகள் மற்றும் உயர் அதிகாரிகளின் சிபாரிசை நாடி வந்தனர்.

இவர்கள் அளித்த பணியிட மாறுதல் கோரிய மனுக்களும் பரிசீலனையில் இருந்து வந்தன. இந்நிலையில், சென்னையில் பணிபுரியும் 214 போலீஸ் இன்ஸ்பெக்டர்களை பணியிட மாறுதல் செய்து, போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் நேற்று முன் தினம் உத்தரவிட்டுள்ளார்.இவர்களில், 53 பேர் பெண்கள், 35 பேர் போக்குவரத்து காவல் இன்ஸ்பெக்டர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement



Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *