Tamil News 12 24 2020 869030177593232 Tamil News Spot
Share on Social Media

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.37,000-ஐ தாண்டியது. சென்னையில் ஏறுவதும், இறங்குவதுமாக இருந்துவரும் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.8 குறைந்து ரூ.37,712-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.1 குறைந்து ரூ.4,714-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.71.30-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தொழில்துறை தேக்கத்தைத் தொடர்ந்து உலகம் முழுவதுமே முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடு பக்கம் திரும்பினர். பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என மற்ற பலவற்றில் இருந்த முதலீடுகளையும் மாற்றி தங்கத்தில் முதலீடு செய்தனர். பாதுகாப்பு கருதி தங்கத்தில் முதலீடு செய்வதால் தங்கத்தின் தேவை அதிகரித்து அதன் விலை உயர்ந்து வருகிறது. கரோனா வைரஸ் பாதிப்பால் தொழில்துறை தேக்கம் குறித்த பீதி நிலவி வரும் நிலையில், தங்கம் விலையில் தற்போது ஏற்ற இறக்கங்கள் நிலவி வருகின்றன.

கடந்த வாரத்தில் தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்த நிலையில் இன்று தங்கம் விலை சற்று குறைந்து சவரன் ரூ.37,712-க்கு விற்பனையாகிறது. இதனால் வரும் நாட்களில் விலை குறையுமா அல்லது மேலும் கூடுமா என்ற குழப்பத்தில் பொதுமக்கள் தங்கம் வாங்க தயக்கம் காட்டுகின்றனர்.

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *