Share on Social Media


சென்னைக்கு அடுத்தப்படியாக கோவை மாவட்டத்திற்கு அதிக தடுப்பூசி ஒதுக்கிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் நன்றி தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், செங்கல்பட்டு தடுப்பூசி தயாரிப்பு மையம் உள்ளிட்ட தமிழகத்திற்கான தேவைகள் குறித்து மத்திய அரசிடம் பேச இருப்பதாகக் கூறினார்.

பாஜக தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் டெல்லி செல்வதற்கு முன்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர் தமிழகத்தில் பணிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடத்த வேண்டாம் என்பதுதான் பாஜகவின் நிலைப்பாடு என்றும் அதே நிலையில் தமிழகத்தில் 12-ஆம் வகுப்பு தேர்வுகள் இருக்கா இல்லையா என்பதை விரைவில் தமிழக அரசு சொல்ல வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். தமிழகத்தில் தடுப்பூசி தட்டுப்பாடு வராத நிலையில் மத்திய அரசு தடுப்பூசிகளை கொடுத்துள்ளதாகவும் அதிலும் அதிகமாக தமிழக அரசு கோவைக்கு கொடுத்துள்ளதை தான் வரவேற்பதாகவும் அவர் கூறினார்.

சிபிஎஸ்இ தேர்வு ரத்து செய்யப்பட்டது போல நீட் தேர்வு ரத்து செய்யப்படுமா என்ற கேள்விக்கு ? பதில் சொல்லிய வானதி சீனிவாசன், தற்போது 12-ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட வேண்டும், அதன் பின்னர்தான் – நீட் தேர்வு எப்படி வரப்போகிறது என்பது தெரியவரும் என்று கூறினார்.



Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *