1601128493 jun Tamil News Spot
Share on Social Media

வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் மர்மமான மனிதராகப் பார்க்கப்படுபவர். அதனாலேயே அவர் பற்றிப் பல மர்மமான செய்திகள் பரப்பப்படுகின்றன. அதிபர் கிம் இறந்துவிட்டார் என்பதுதான் கொரோனா காலத்தில் வட கொரியாவைப் பற்றிப் பேசப்பட்ட முதன்மை விஷயம். உடல்நிலை சரியில்லாமல் தீவிர சிகிச்சை எடுத்துவந்த கிம், உலக ஊடகங்களுக்குக் காண்பிக்கப்படாமல் இருந்தார். ஆதலால், அவர் இறந்திருக்க வாய்ப்புண்டு என்ற அனுமானங்கள் கிளம்பின. ஆனால், சில நாட்களிலேயே விழாக்களில் தரிசனம் தந்து வதந்திகளுக்கு முடிவு கட்டினார். கடந்த சில மாதங்களாக இதுவே வழக்கமாக இருந்தது. மேலும், வடகொரியாவில் தலைவிரித்தாடும் பஞ்சத்தால் உண்ண உணவில்லாமல் மக்கள் அவதியுறுகிறார்கள், பூச்சிகளை உண்ண மக்களிடம் கட்டளையிட்டுள்ளார் கிம் போன்ற தகவல்கள் கூறப்பட்டன. பன்னாட்டு ஊடகங்களுக்கு வட கொரியாவில் தடை இருப்பதால் செய்திகளைத் துல்லியமாக அறிவதில் சிக்கல் உள்ளது. கடந்த மாதங்களில் வட கொரியாவில் நடந்த குறிப்பிடத்தக்க அரசியல் நிகழ்வுகளை ஒட்டி அந்நாட்டின் இன்றைய நிலையைக் கணக்கிட முயலலாம்.

கிம் ஜாங் உன்

கிம் ஜாங் உன்
AP

கிம் பற்றிய பல்வேறு கற்பனை செய்திகள் பரவ அவர் சகோதரியின் பதவி நியமனம் முக்கிய காரணம். கடந்த மூன்று தலைமுறையாக கிம் குடும்பம் மட்டுமே வடகொரியாவை ஆள்கிறது. ஒரே குடும்பத்திற்குள்ளே யார் அதிகாரம் செலுத்துவது என்ற போட்டியும் பரவலாக இருக்கும். கிம் தனது பதவிக்குப் போட்டியாக இருந்த அவரது சகோதரரைக் கோலாலம்பூர் விமான நிலையத்தில் ரசாயன திரவம் வீசி துடிதுடிக்கக் கொலை செய்தார் என்பது அவர் மீதான பயங்கரமான குற்றச்சாட்டு. அப்படியிருக்கையில், இன்று தனது இளைய சகோதரி ‘கிம் யோ ஜோங்கிற்கு’ (Kim yo Jong) பல முக்கிய பொறுப்புகளைக் கொடுத்துள்ளார். பொறுப்பு என்றால் வெறும் பெயருக்கான பதவியல்லாமல், தென் கொரியா மற்றும் அமெரிக்கா வெளியுறவு விவகாரங்களைக் கையாளவும், குறிப்பாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புடனான கடிதப்போக்குவரத்தின் பொறுப்பாளராகவும் பதவியேற்றார் யோங் ஜோ. வட கொரியாவிற்கு தென் கொரியா மற்றும் அமெரிக்காவுடனான உறவை அறிந்தவர்களுக்கு இந்தப் பதவியின் தேர்வு அதிர்ச்சியைக் கொடுத்தது.

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *