Share on Social Media



கூடலுார்: கூடலூரில் நேற்று முன்தினம் இரவு வீசிய பலத்த சூறாவளி காற்றால் வாழை மற்றும் தென்னை மரங்கள் சாய்ந்தன. சில நாட்களாக தென்மேற்கு பருவமழை தீவிரம் காரணமாக தமிழக- கேரள எல்லையான தேனி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், நேற்று முன்தினம் கூடலூர் கல்லுடைச்சான்பாறை, 18ம் கால்வாய் உள்ளிட்ட பகுதிகளில் இரவு பலத்த சூறாவளி காற்று வீசியது. இதில், 30 தென்னை மரங்களும், சுமார் 500 வாழை மரங்களும் சாய்ந்தன. இதுபோல் இப்பகுதியில் 4 மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்ததால் இரவு முழுவதும் மின்சார சப்ளை துண்டிக்கப்பட்டது. பாதிப்படைந்த கூடலூரை சேர்ந்த விவசாயிகள் சிவக்குமார், பொன்ராஜ், அருண்குமார், செல்வேந்திரன், கிருஷ்ணகுமார் ஆகியோர் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.



Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *