Share on Social Media


சன் பிக்சர்ஸ் ஒரே நேரத்தில் விஜய், சூர்யா, தனுஷ் ஆகியோரின் படங்களைத் தயாரித்து வருகிறது. இதில் தனுஷின் ‘திருச்சிற்றம்பலம்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து, போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் போய்க் கொண்டிருக்கிறது.

நேற்று பெருங்குடியில் உள்ள சன் ஸ்டூடியோவில் விஜய்யின் ‘பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பும், சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ படப்பிடிப்பும் ஒரே நேரத்தில் நடந்து கொண்டிருந்தது. பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா, பிரியங்கா மோகன் நடிப்பில் பாடல் காட்சி ஒன்றின் பேலன்ஸ் ஷூட் நடந்தது. விஜய், சூர்யா இவர்களின் படப்பிடிப்பும் ஒரே இடத்தில் அருகருகே இருக்கும் தளங்களில் நடந்து வந்ததால், உணவு இடைவேளையில் இருவரும் சந்திக்கும் வாய்ப்பு அமைந்தது.

சூர்யாவின் படப்பிடிப்புத் தளத்திற்குத் திடீரென என்ட்ரி கொடுத்த விஜய்யைக் கண்டு, ‘எதற்கும் துணிந்தவன்’ யூனிட் இன்ப அதிர்ச்சி அடைந்தது. விஜய்யின் விசிட்டை முக மலர்ச்சியோடு வரவேற்றிருக்கிறார் சூர்யா. அதன்பின் இருவரும் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தனர். சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் வெற்றி பெற்றதற்கு விஜய்யிடம் பாராட்டுகளைத் தெரிவித்தார் சூர்யா. விஜய்யும், ‘ஜெய்பீம்’ படத்தைப் பார்த்து ரசித்தது குறித்து சூர்யாவிடம் பாராட்டி மகிழ்ந்திருக்கிறார். இதைப்போல சென்னை கோகுலம் ஸ்டூடியோவில் ‘பீஸ்ட்’ படப்பிடிப்பு நடந்தபோது பக்கத்துத் தளத்தில்தான் கார்த்தியின் ‘சர்தார்’ படப்பிடிப்பும் நடந்தது. படப்பிடிப்பின் இடையே விஜய்யும் கார்த்தியும் சந்தித்துப் பேசினார்கள்.

‘எதற்கும் துணிந்தவன்’ படப்பிடிப்பு நேற்றுதான் நிறைவடைந்தது என்றாலும், மழை வேகத்தில் இன்றே போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகளைத் தொடங்கிவிட்டனராம்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *