Share on Social Media


உடலியல், உளவியல், சமூகவியல் காரணங்களை எல்லாம் பேசி, முழுமையான சிகிச்சை பெற்று, இதிலிருந்து மீண்டவர்கள் இருக்கிறார்கள். சில வார சிகிச்சையிலேயே முழுவதுமாக மீண்டு, பல வருடங்களாக மறுபடி போதையைத் தொடாமல் உறுதியோடு இருப்பவர்கள் இருக்கிறார்கள். அதுவே மாதக் கணக்கில் சிகிச்சைபெற்றுத் திரும்பி, மறுபடி அதே விஷயத்துக்கு அடிமையாகி, மறுபடி சிகிச்சைக்கு வருபவர்களையும் பார்க்கிறோம்.

Narcotic Drugs

Narcotic Drugs
Photo by Daniel Norin on Unsplash

டீ அடிக்ஷன் விஷயத்தைப் பொறுத்தவரை ஒரு நபர், இனி மறுபடி போதையைத் தொடவே மாட்டார் என்பதை நூறு சதவிகிதம் உறுதியாகச் சொல்லவே முடியாது. பாதிக்கப்பட்ட நபரின் எல்லா பிரச்னைகளையும் ஆராய்ந்து, சிகிச்சை கொடுத்தாலுமே, விட்ட போதையை மீண்டும் தொடர்வாரா, மாட்டாரா என்பது பத்து சதவிகிதம் அந்த நபரின் கைகளில் உள்ளது. அந்தக் கட்டுப்பாடு அவரிடமிருந்துதான் வர வேண்டும்” என்கிறார் டாக்டர் மிதுன் பிரசாத்.

அரசு மனநல காப்பகங்களில் போதை அடிமைகளுக்கான சிகிச்சைகள் எப்படி இருக்கும்..? அடுத்த அத்தியாயத்தில்…



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *