Share on Social Media

முதல் போட்டியைப் போலவே, இப்போட்டியிலும் ஒரு அட்டகாசமான ரன் அவுட் மூலமாக, ஆபத்தான ஸிவரை ரிச்சா கோஷ் வெளியேற்றினார். இரண்டு பவுண்டரிகள், வைடு பாலில் ஐந்து ரன்கள் எனப் பல வித்தியாசமான நிகழ்வுகள் நடந்தேறிய ஷிகாவின் அந்த ஓவர், போன போட்டியின் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்திய அந்த 19-ம் ஓவரை நினைவுக்குக் கொண்டு வந்தது. பின்னர், வைடு பாலில் ஸிவரின் ரன் அவுட்டோடு முடிவுக்கு வந்தது.

ஆறு ஓவர்களிலேயே, 52 ரன்களைக் குவித்துவிட்ட இங்கிலாந்து, வெற்றியைக் கிட்டத்தட்ட நெருங்கிவிட்டதாகவே உணர்ந்திருக்கும். ஆனால், இந்தியா அவ்வளவு சுலபமாக விட்டுக் கொடுப்பதாக இல்லை, பதிலடி கொடுத்தது.

முதலில் ரன் குவிப்பைக் கட்டுப்படுத்தினர். கடைசி பத்து ஓவர்களில், 69 ரன்கள் வேண்டுமென்று கொண்டு வந்தவர்கள், அடுத்ததாக விக்கெட்டுகளை வீழ்த்தாவிடில் வேலைக்காகாது என அதில் கவனம் செலுத்தத் தொடங்கினர். மிக மிகப் பரபரப்புடனே காணப்பட்டது மைதானம். இந்தத் தருணத்தில், கியரை மாற்றி, ரன்ரேட்டைக் கூட்டத் தொடங்கியது, நைட் – பீமண்ட் கூட்டணி. கடைசி 42 பந்துகளில், 44 ரன்கள்தான் வேண்டுமென்னும் நிலையில், இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே இழந்திருந்த இங்கிலாந்து, போட்டியை அங்கேயே வென்றது போலத்தான் இருந்தது.

ENGvIND | Women's Cricket

ENGvIND | Women’s Cricket
twitter.com/BCCIWomen

அங்கிருந்து மீண்டு வந்தது இந்தியா. தீப்தி வீசிய பந்தில், 59 ரன்களோடு நின்றிருந்த பீமன்ட் ஆட்டமிழந்தார். இதுதான் போட்டியின் திருப்புமுனை. அதற்கடுத்த பந்திலேயே நைட்டை தீப்தியே அற்புதமாக ரன்அவுட் செய்திருந்தார். செட்டிலான இரண்டு பேட்டர்களும் வெளியேற, இந்திய ரசிகர்கள் நிமிர்ந்து உட்கார்ந்தனர். அவர்களை இருக்கை நுனிக்குக் கொண்டு வர வைத்தன அடுத்த சில நிமிடங்கள்.

Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *