Share on Social Media

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.216 குறைந்துள்ளது. சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,625க்கும், சவரன் ரூ.37,000க்கும் விற்பனை ஆகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.76க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 400 ரூபாய் அதிரடியாக உயர்ந்தது. சென்னையில் நேற்று ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,652க்கும், சவரன் ரூ.37,216க்கும் விற்பனையானது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.77.10க்கும் விற்பனை செய்யப்பட்டது. தொடர் அதிகரிப்பில் இருந்த தங்கம் விலை இன்று சற்று குறைந்திருப்பது நகை பிரியர்களை பெருமூச்சு விட செய்திருக்கிறது. 

இந்த வருடம் தொடக்கம் முதலே தங்கம் விலை கண்ணாமூச்சி ஆடி வருகிறது. ஒருநாள் விலை சரிவதும், மறுநாளே ஏறுமுகத்தை சந்திப்பதும் தங்கத்தின் வேலையாக இருந்தது. இருப்பினும் தங்கத்தின் மீதான மோகம் மக்களுக்கு குறைந்தபாடில்லை. தங்கம் பெண்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று, தென்இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. மேலும் தமிழ்நாட்டு பெண்களின் தங்க நகைகள் மீதான மோகம் மிகவும் அதிகம். தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகம். தொடர் கொரோனா ஊரடங்கு காரணமாக தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்ததே அதன் விலை ஏற்றத்திற்கு முக்கிய காரணமாக கோரப்பட்டுள்ளது. 

தற்போது தளர்வுகள் அளிக்கப்பட்டு தொழிற்துறைகள் முழுவீச்சில் செயல்படத் தொடங்கி இருப்பதால் பிற பங்குகளின் மீதான முதலீடுகள் உயர்ந்துள்ளன. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.43,000ஐ  தாண்டி, வரலாறு காணாத உச்சத்தை தொட்டது. இதன்பிறகு, விலை படிப்படியாக குறைந்து, ரூ.34,000க்கு கீழ் இறங்கியது. குறிப்பாக, கடந்த மார்ச் 31ம் தேதி அன்று ரூ.33,296 ஆக இருந்தது. இதையடுத்து, தங்கம் விலை படிப்படியாக உயர்ந்து, ரூ.36 ஆயிரத்தைத் தாண்டியது. தொடர்ந்து, தங்கம் விலை ஏற்ற இறக்கமாக இருந்து வந்தது. இந்நிலையில், சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 216 குறைந்திருப்பது நகை பிரியர்களை நிம்மதியடைய செய்திருக்கிறது. 

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *