Share on Social Media

மத்திய அரசின் இரு உறுப்பினர்களின் ஓட்டுகளையும் சேர்த்து 33.33% மதிப்பளிக்கப்பட்டிருக்கிறது. 31 மாநில உறுப்பினர்களின் ஓட்டுக்களுக்குத் தலா 2.15% ஓட்டு மதிப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. ஆக ஒரு மாற்றைத்தைக் கொண்டு வர வேண்டும் என்றால்கூட, குறைந்தபட்சமாக இரு மத்திய உறுப்பினர்கள் மற்றும் 20 மாநில உறுப்பினர்களின் ஓட்டுகள் அவசியம். அப்போதுதான் 75% ஓட்டுடன் மாற்றத்தைக் கொண்டு வர முடியும். இதற்காகத்தான் ஜி.எஸ்.டி கவுன்சில் ஒரு மாநிலத்துக்கு ஒரு வாக்கு என்கிற நடைமுறை பொருந்தாது என பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

மக்கள் தொகை அளவின்படி வாக்குகளைக் கொடுத்தால், உத்தரப்பிரதேசம் வாக்கு எண்ணிக்கையை அதிகம் பெறும். அதனால், உற்பத்தி மற்றும் வரி வசூல் ஆகியவற்றின் அடிப்படையில் மாநிலங்களுக்கான வாக்கு எண்ணிக்கையை பிரிப்பது நல்லது. அது நியாயமானதும் கூட. ஆனால், இதை மத்திய அரசாங்கம் ஏற்றுக்கொள்ளப்போவதாகத் தெரியவில்லை. மேலுல், பல கேள்விகளுக்கும் குழப்பங்களுக்கும் கவுன்சில் உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியது, அதை அடுத்த கவுன்சில் கூட்டத்தில் பேசிக்கொள்ளலாம் எனத் தெரிவித்திருக்கிறார்கள்.

பி.ஜே.பி தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்து, சொல்வது ஒன்று செய்வது ஒன்றுமாகத்தான் நடந்துகொள்கிறார்கள். மேலைநாடுகளில், அரசின் அதிகாரமானது மேலிருந்து கீழாக பரவலாக்கப்பட்டிருக்கும். ஆனால், இந்தியாவில் மட்டும்தான். அனைத்து அதிகாரமும் மத்தியில் குவிக்கப்பட்டிருக்கிறது.

இது வளர்ச்சியின் போக்குக்கு சரியானது கிடையாது. மாநிலங்கள் இல்லாமல் மத்திய அரசு இயங்க முடியாது என்பதை நினைவில் கொண்டு, மாநில அரசுகளுக்கான உரிமையை மாநில அரசுகளுக்கே வழங்க வேண்டியது மத்திய அரசின் கடமையாகும்” என்றார் தெளிவாக.

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *