Share on Social Media

புதுடில்லி: கொலை வழக்கு தொடர்பாக சுஷில் குமார் கைது செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகின.

இந்திய மல்யுத்த வீரர் சுஷில் குமார் 37. ஒலிம்பிக்கில் இரு பதக்கம் வென்றவர். முன்னாள் ஜூனியர் சாம்பியன் சாகர் ராணா கொலை வழக்கில், தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். இவர் மீது ஜாமினில் வெளியே வர முடியாத ‘பிடிவாரன்ட்’ உள்ளது. இவர் குறித்து தகவல் தெரிவித்தால் ரூ. 1 லட்சம் சன்மானம் தரப்படும் என டில்லி போலீசார் அறிவித்தனர். சுஷில்குமார் தாக்கல் செய்த முன்ஜாமின் மனு தள்ளுப்படியானது.

இந்நிலையில் இவரை கைது செய்த பஞ்சாப் போலீசார், டில்லி போலீசிடம் ஒப்படைத்ததாக செய்திகள் வெளியாகின. இதனை டில்லி போலீசார் உறுதி செய்யவில்லை.

Advertisement

Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *