Share on Social Media

புதுடில்லி: போலீஸ் விசாரணையில் முன்னுக்குப் பின் முரணாக பேசிய சுஷில் குமார், ஒரு கட்டத்தில் கதறி அழுதுள்ளார்.

இந்திய மல்யுத்த வீரர் சுஷில் குமார் 37. ஒலிம்பிக்கில் இரு பதக்கம் வென்றவர். முன்னாள் ஜூனியர் சாம்பியன் சாகர் ராணா 23, கொலை வழக்கில் டில்லி போலீசால் கைது செய்யப்பட்டார். இவரை 6 நாள் காவலில் எடுத்து, போலீசார் விசாரித்து வருகின்றனர். இதுகுறித்து வெளியான செய்தி:

டில்லி ‘கிரைம்’ பிரிவு போலீசார் சுஷிலிடம் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். இவருக்கும் ‘தாதாக்களுக்கும்’ தொடர்பு உள்ளதா, அடிதடிக்கு உதவியது யார், தலை மறைவாக இருந்த போது, இடம் கொடுத்தது யார் என ஆராய்ந்து வருகின்றனர். நேற்று அதிகாலை 4:00 மணிக்கு சாகர் தாக்கப்பட்ட சத்ராசல் மைதானத்துக்கு சுஷிலை அழைத்துச் சென்ற போலீசார், சம்பவம் நடந்தது எப்படி என விசாரித்தனர்.

அடுத்து சர்ச்சைக்கு காரணமாக டில்லி மாடல் டவுன் பிளாட்டுக்கும் கொண்டு சென்றனர். தவிர சுஷில் வசித்த ஷாலிமார் பாக் வீட்டிற்கும் அழைத்துச் சென்றனர். சம்பவம் நடந்த போது சத்ரசால் மைதானத்தில் இருந்ததை ஒப்புக் கொண்ட சுஷில், இருதரப்பில் நடந்த மோதலை விலக்கி விட்டதாக தெரிவித்தார். அதேநேரம் சாகரை வீட்டில் இருந்து கடத்திக் கொண்டு வந்ததற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என மறுத்தார். இந்த நேரத்தில் போலீசார் கேட்ட கேள்விகளுக்கு சுஷில், மாற்றி மாற்றி பதில்கள் அளித்தார். நான்கு மணி நேரம் நீடித்த இந்த விசாரணையின் ஒரு கட்டத்தில் கதறி அழுதார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

ஒப்பந்தம் ரத்து

இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தரப்பில் கூறுகையில்,‘சுஷில் குமார், மல்யுத்த வீராங்கனை பூஜா தண்டா இருவரும் சமீபத்திய போட்டிகள் எதிலும் சிறப்பாக செயல்படவில்லை. இதனால் அடுத்த மாத கூட்டத்தில் இவர்கள் ஒப்பந்தம் மீண்டும் புதுப்பிக்கப்பட மாட்டாது. மற்றபடி சுஷில் கைதானதால் இப்படிச் செய்யவில்லை,’ என கூறப்பட்டுள்ளது.

 

மரணம் எப்படி

கொலை செய்யப்பட்ட சாகரின் ‘போஸ்ட் மார்ட்டம்’ அறிக்கை வெளியானது. இதில்,‘ சாகர் உடலில் பல இடங்களில் நீல நிறமாக காணப்பட்டன. தலை முதல் முழங்கால் வரை பல ஆழமான காயங்கள் இருந்தன. எலும்புகள் சிதைந்திருந்தன. பலமான பொருள் கொண்டு தலையில் குத்தியுள்ளனர். இதனால் மரணம் ஏற்பட்டுள்ளது,’ என கூறப்பட்டுள்ளது.

Advertisement

Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *