Share on Social Media


சேர்த்தலை பகுதியைச் சேர்ந்த ஷாஜி என்பவர் மோன்சன் மாவுங்கல் தன்னிடம் இருந்து 6.27 கோடி ரூபாய் வாங்கி மோசடி செய்ததாகப் புகார் அளித்திருக்கிறார். கேரள மாநிலம் ஆலப்புழாவைச் சேர்ந்தவர் மோன்சன் மாவுங்கல். இவர் தொல் பொருட்களை விற்பனை செய்துவருவதாகவும், பழங்கால பொருட்களை சேகரிப்பவராகவும் கூறிக்கொண்டு வலம்வந்திருக்கிறார். சில தெலுங்கு சினிமாக்களிலும் இவர் நடித்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து கிரைம் பிரிவு போலீஸார் நடத்திய விசாரணையில் சுல்தானின் கிரீடம் விற்ற வகையில் 70,000 கோடி ரூபாய் வரவேண்டியுள்ளது. அதற்கு வரி செலுத்துவதற்காகப் பணம் தேவைப்படுவதாக மோன்சன் மாவுங்கல் சில ஆதாரங்களைக் காட்டிப் பணம் பெற்றுள்ளதாகத் தெரிய வந்துள்ளது. தற்போது பணம் கொடுத்தால் அதற்கு பதிலாக வட்டி இல்லாமல் நூறு கோடி ரூபாய் வங்கி லோன் வாங்கிதருவதாகக் கூறியதுடன் அதற்கான வங்கி ஆவணங்கள் சிலவற்றையும் காட்டியிருக்கிறார். இந்த மோசடி குறித்து விசாரணை நடத்திய போலீஸார் மோன்சன் மாவுங்கல்லை கைது செய்துள்ளனர்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *