Share on Social Media

புதுடில்லி: இரண்டு ஆண்டு தடையை எதிர்த்து மல்யுத்த வீரர் சுமித் மாலிக் அப்பீல் செய்ய முடிவு செய்துள்ளார்.

இந்திய மல்யுத்த வீரர் சுமித் மாலிக் 28. கடந்த 2018 காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்றார். கடந்த மே மாதம் பல்கேரியாவின் சோபியாவில் நடந்த தகுதி போட்டியில் பைனலுக்கு முன்னேறிய இவர், டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க தகுதி பெற்றார். ஆனால் இவர் ஊக்கமருந்து பயன்படுத்தியது தெரியவர, இரண்டு ஆண்டு தடை விதிக்கப்பட்டது. 

இதனிடையே சுமித் மாலித் தரப்பில் வெளியான செய்தி:

கடந்த ஏப்ரல் மாதம் கொரோனா வைரஸ் இருக்கலாம் என்ற சந்தேகத்தில், மருந்துகள் எடுத்துக் கொண்டார். இதில் தடை செய்யப்பட்ட பொருட்கள் ஏதாவது கலந்திருக்கலாம். சுமித் மாலிக்கிற்கு குறைந்தளவு தண்டனை தர வேண்டும் என எதிர்பார்க்கிறோம். தவிர சோதனை முடிவுகளையும் கேட்டுள்ளோம். ஏனெனில் இவருக்கு இரு ஆண்டு தடை என்பது ஏற்றதல்ல. விரைவில் அப்பீல் செய்ய தயாராகி வருகிறோம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *