Share on Social Media

பெங்களூரு: பெங்களூரு அணி கேப்டன் சுனில் செத்ரி ஒப்பந்தம் 2023 வரை நீட்டிக்கப்பட்டது.

இந்திய கால்பந்து அணி கேப்டன் சுனில் செத்ரி 36. இதுவரை 75 கோல் அடித்த இவர், சர்வதேச அளவில் தேசிய அணிக்காக அதிக கோல் அடித்த வீரர்களில் ‘டாப்–10’ இடத்தில் உள்ளார். கிளப் கால்பந்தில் 203 போட்டிகளில் 101 கோல் அடித்துள்ளார்.

ஐ.எஸ்.எல்., தொடரில் பெங்களூரு அணிக்காக விளையாடுகிறார். 2013 முதல் இரண்டு ‘ஐ–லீக்’, இரண்டு பெடரேஷன் கோப்பை, ஒரு முறை ஐ.எஸ்.எல்., கோப்பை வென்று தந்துள்ளார். தற்போது இவரது ஒப்பந்தம் அடுத்த இரு ஆண்டுகளுக்கு (2023 வரை) புதுப்பிக்கப்பட்டுள்ளது.

சுனில் செத்ரி கூறுகையில்,‘‘பெங்களூரு அணிக்காக இன்னும் இரண்டு ஆண்டுகள் விளையாட உள்ளது மகிழ்ச்சி. இங்குள்ளவர்கள் எனது குடும்பத்தினர் போல செயல்படுகின்றனர். தவிர ரசிகர்கள், இந்த அணி மீது நான் கொண்ட அன்பு என மூன்றும் சேர்ந்து வலுவான இணைப்பை என்னுடன் ஏற்படுத்தியுள்ளது. இந்த அணிக்காக பல கோப்பைகள் வென்று தர ஆர்வமாக உள்ளேன்,’’ என்றார்.

Advertisement

Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *