Share on Social Media


தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது 50 வருடத்துக்கும் மேலான அரசியில் வாழ்க்கையில் முதல்முறையாக சுதந்திர தினத்தன்று தேசியக் கொடியை கோட்டையில் ஏற்றவிருக்கிறார். இதுகுறித்தும், இந்திய தேசியக்கொடி ஏற்றும் உரிமையை மாநில முதல்வர்கள் பெற்ற வரலாற்றையும் சுருக்கமாக இங்கு பார்ப்போம்.

முதலமைச்சர்கள் கொடியேற்ற உரிமை கோரிய கருணாநிதி:

1973 ஆம் ஆண்டு வரை குடியரசு தினம், சுதந்திர தினம் போன்ற நாட்களில் கவர்னர்கள் மட்டுமே கொடியேற்றுவது வழக்கமாக இருந்து வந்தது. மாநில முதலமைச்சர்களுக்கு இந்த அதிகாரம் வழங்கப்படவில்லை. இவ்வழக்கத்தை மாற்றியமைத்த பெருமை, மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியையே சாரும்.

கோட்டையில் தேசியக்கொடி ஏற்றும் உரிமையைப் பெற்றுத் தந்தவர் கருணாநிதி!

கோட்டையில் தேசியக்கொடி ஏற்றும் உரிமையைப் பெற்றுத் தந்தவர் கருணாநிதி!

1969 ஆம் ஆண்டு முதன்முறையாக முதல்வராக பதவியேற்றுக்கொண்ட கருணாநிதி, “மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி” என்ற தத்துவத்தை மாநிலம் முழுவதும் முழங்கி வந்தார்.

அதன் தொடர்ச்சியாக, ஆட்சிக்கு வந்த அதே வருடம், அப்போதைய பிரதமராக இருந்த இந்திரா காந்தியிடம், மாநில முதலமைச்சர்களும் சுதந்திர தினத்தன்று கொடியேற்றுவதற்கான உரிமை வழங்க கோரி கடிதம் எழுதினார் கருணாநிதி.

இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட இந்திரா காந்தி, “மாநில முதலமைச்சர்கள் சுதந்திர தினத்தன்றும் கவர்னர்கள் குடியரசு தினத்தன்றும்” கொடியேற்றும் சட்டம் கொண்டுவரப்பட்டது. 1974 ஆம் ஆண்டு முதல்வராக மு.கருணாநிதி முதன்முறையாக இந்திய சுதந்திரக்கொடியை ஏற்றினார். தமிழக முதல்வராக ஆட்சியில் இருந்த சமயத்தில் மு.கருணாநிதி 14 முறையும், அவரைத் தொடர்ந்து முதல்வராக பதவிவகித்த எம்.ஜி.ஆர். 11 முறையும், ஜெ.ஜெயலலிதா 16 முறையும், எடப்பாடி பழனிசாமி 4 முறையும் கொடியேற்றி உள்ளனர்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *