Share on Social Media

பீஜிங்: சீனாவில் நடந்த மாராத்தான் ஓட்டத்தில் பங்கேற்ற 21 பேர் பலியாகினர்.

சீனாவின் கன்சு மாகாணத்தில் உள்ள பையின் நகரில், 100 கி.மீ., துாரம் கொண்ட ‘அல்ட்ரா’ மாரத்தான் ஓட்டம் நடந்தது. இதில் 172 பேர் பங்கேற்றனர். இவர்கள், 2000 முதல் 3000 மீ., உயரத்தில் குறுகிய மலைப்பாதையில் ஓடினர். அப்போது ஆலங்கட்டி மழை, உறைபனி மழை என வானிலை மிகவும் மோசமாக இருந்தது. இதில் சிக்கிய 21 பேர் பலியானதாக அங்குள்ள மீடியாவில் செய்திகள் வெளியாகின. மீதமுள்ள 151 பேர் பாதுகாப்பாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இறந்தவர்களில் ஒருவர், நிங்போவில் நடந்த 100 கி.மீ., மாரத்தான் ஓட்டத்தில் வெற்றி பெற்ற லியாங் ஜிங் என்று கூறப்படுகிறது.

மீட்பு பணியில் 700க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர். ஆனால் இரவு நேரத்தில் மோசமான வானிலை காரணமாக மீட்பு பணியில் சிக்கல் ஏற்பட்டது.

Advertisement

Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *