பீஜிங்: சீனாவின் மேற்கு பிராந்தியத்தில் குறிப்பாக ஜின்ஜியாங்கில் வசிக்கும் சிறுபான்மையினரான உய்குர் முஸ்லிம்கள் மீது சீனா அடக்குமுறை, மத துஷ்பிரயோகம் செய்வதாக அமெரிக்கா தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. இந்நிலையில், இந்த மக்களை வலுக்கட்டயமாக ஊழியர்களாக பயன்படுத்தி இந்த மாகாணத்தில் உற்பத்தியாகும் பொருட்களை அமெரிக்காவில் இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்கும் புதிய சட்டம், அமெரிக்க செனட் சபையில் நேற்று முன்தினம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதற்கு விரைவில் பதில் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளது.