Share on Social Media


ஜி ஜின்பிங்குக்காக மாற்றப்பட்ட சட்டம்…

சீன அரசியல் சாசனப்படி, ஒருவர் இரண்டுமுறை மட்டுமே அதிபராக பதவிவகிக்க முடியும். ஆனால், 2018-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சட்டதிருத்தத்தில் அந்தவிதி நீக்கப்பட்டது. அப்போதே, இந்த சட்டதிருத்தம் ஜி ஜின்பிங் பதவிக் காலத்தை நீட்டிப்பதற்காக எடுக்கப்பட்ட முன்னேற்பாடாகவே கருதப்பட்டது. அதேபோல, 68 வயதுக்குமேல் உள்ள சீன கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் ஓய்வுபெற வேண்டும் என்பது விதி. ஆனால், 68 வயது நிரம்பியிருக்கும் ஜி ஜின்பிங் கட்சியின் பொதுச்செயலாளராக, மத்திய ராணுவ ஆணையத்தின் தலைவராக, நாட்டின் அதிபராகவும் மூன்று முக்கிய அதிகாரபீடத்தில் தொடர்கிறார்.

தீர்மானம்:

இந்நிலையில், அடுத்த ஆண்டு (2022) ஜி ஜின்பிங்கின் இரண்டாவது அதிபர் பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில், ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் கட்சியின் மாநாட்டை முன்கூட்டியே நடத்த மத்திய உயர்நிலைக் கூட்டத்தில் தற்போது முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, ஜி ஜின்பிங் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் மூன்றாவது முறையாக சீன அதிபராக பதவியேற்கவிருப்பது உறுதியாகியிருக்கிறது.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *