Share on Social Media


உலகம் தட்டை என்றுதான் நீண்ட நாள்களாக நம்பிக் கொண்டிருந்தது உலகம். வௌவால்களுக்கு கண் தெரியாது, ஒரே இடத்தில இருமுறை மின்னல் தாக்காது என சமகாலத்தின் அறிவியல் அறிஞர்கள் உண்மை என நம்பிக் கொண்டிருந்த பல விஷயங்கள் எதிர்கால கண்டுபிடிப்புகளால் தவிடு பொடியாகி இருக்கின்றன. அப்படித்தான் இன்று உலகின் மிக முக்கிய அறிவியலாளர்களின் நம்பிக்கை ஒன்றும் மிக சூடான விவாதப்பொருளாகி இருக்கிறது. உலகையே புரட்டிக் கொண்டிருக்கும் கோவிட்-19 கொரோனா வைரஸின் பிறப்பிடம் எது என்பது தான் அந்த கேள்வி?

சீனாவில் இருக்கும் வைரஸ் ஆராய்ச்சி நிறுவனமான ‘வூஹான் இன்ஸ்டிடியூட் ஆஃப் வைராலஜி’யில் தான் இந்த வைரஸ் உருவாக்கப்பட்டது என்ற தகவல்கள் வெளியானபோது, இதை ஒரு கட்டுக்கதை என பிரபல ஊடகங்களும், பல அறிவியலாளர்களும் மறுத்தனர்.

வூஹான் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜி

வூஹான் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜி
asahi.com

ஆனால், சமீபத்தில் இந்த காட்சி மாறியது. வூஹான் பரிசோதனை கூடத்தில் நடந்த ஆய்வுகளை பற்றிய தகவல்கள் தெளிவாக சில பத்திரிகையாளர்கள், ஆராய்ச்சியாளர்களால் முன் வைக்கப்பட்டது. சீன ராணுவம், ஒரு உயிரியல் போரை தொடங்க திட்டமிட்டதாக சில ஆவணங்களும் வெளியாகின. கோவிட்-19 வைரஸ் இயற்கையாக உருவானது என நிரூபிக்க ஒரு சிறு சான்று கூட கடந்த ஒன்றரை ஆண்டில் மருத்துவ உலகிற்கு கிடைக்கவில்லை.

சார்ஸ், மெர்ஸ் போன்ற இதேமாதிரியான வைரஸ்களின் பரவலை பற்றி சில மாதங்களில் கண்டறியப்பட்டது. ஆனால், அதே வகை கோவிட் 19 வைரஸ் பற்றி எந்த தகவலும் உறுதிப்படுத்தப்படவில்லை. அதுமட்டுமின்றி அதை கட்டுப்படுத்தவும் வழி தென்படவில்லை. உலகம் முழுக்க பேரழிவை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது கொரோனா வைரஸ். ஒவ்வொரு உருமாற்றத்திலும் மேலும் வலுப்பெற்று கொண்டிருக்கின்றது. இந்நிலையில் அமெரிக்கா அதிபர் ஜோ பிடென் இது குறித்து உளவுத்துறையின் முழு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். இப்படி, மீண்டும் உலக ஊடகங்கள், அறிவியலாளர்கள், பன்னாட்டு தேசியங்கள், மக்கள் என எல்லோரும் கோவிட் 19 கொரோனா வைரஸ் பரிசோதனை கூடத்தில் உருவாகியிருக்கலாம் என்ற கோணத்தில் யோசிக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *