Share on Social Media


“ஆயிரம் ஆண்டுகளில் பெய்திடாத பெருமழையை சீனா எதிர்கொண்டு வருகிறது. கார் ஓடும் தார் சாலைகளெல்லாம், காட்டாறு போல வெள்ளநீர் ஓடிக்கொண்டிருக்கிறது. புது ஆற்று வெள்ளத்தில் புரண்டுவரும் குப்பைகள்போல, அதில் வாகனங்களெல்லாம் அடித்துச்செல்லப்படுகின்றன. மார்பளவு வெள்ளத்தில் மெட்ரோ ரயில் சுரங்கத்தில், மாட்டித் தவித்துக்கொண்டிருக்கும், சீன மக்களை பார்க்கும் போது மனம் பதைபதைக்கிறது. பலி எண்ணிக்கை பதினாறைத் தாண்டி சென்றுகொண்டிருக்கிறது. கொட்டித்தீர்க்கும் கனமழையில் சாலைகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டு, தனித்தீவுகளாக மாறிப்போயுள்ளன சீன மாகாணங்கள்! இன்னும் மூன்று நாட்களுக்கு தொடர்ந்து மழை பெய்யும் என அதிரவைக்கிறது சீன வானிலை மையம்!”

ஹெனான் மாகாணம்

ஹெனான் மாகாணம்

என்ன நடக்கிறது சீனாவில்..?

சீனாவில் கடந்த ஒரு வாரமாக, வரலாறு காணாத அளவில் கனமழை பெய்து வருகிறது. மழைக்கால சீனாவில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவது என்பது வாடிக்கையான ஒன்றுதான்! ஒவ்வொரு ஆண்டும் நிகழ்வதென்றாலும், இப்போது பெய்யும் மழையானது ஆயிரம் ஆண்டுகளில் இல்லாத கனமழை என்று கூறுகிறார்கள் சீனாவின் வானிலை ஆய்வாளர்கள். குறிப்பாக, இந்த வெள்ளப்பெருக்கில் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பது ஹெனான் மாகாணமும் அதன் தலைநகர் ஜென்சோ பகுதியும்தான். இந்தப் பகுதியின் சராரசரி ஆண்டு மழைப்பொழிவே 640.8 மி.மீ அளவு. ஆனால் நேற்று ஒருநாளில் மட்டும் 457.5 மி.மீ. அளவுக்கு மழை பதிவாகியுள்ளது. குறிப்பாக, ஜென்சோ பகுதியில் நேற்று மாலை 4 முதல் 5 மணி வரையிலான ஒரு மணிநேரத்தில் சுமார் 201.9 மி.மீ. அளவில் மழை பெய்துள்ளது.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *