Share on Social Media


செய்திப்பிரிவு

Published : 20 Dec 2021 08:10 am

Updated : 20 Dec 2021 08:10 am

 

Published : 20 Dec 2021 08:10 AM
Last Updated : 20 Dec 2021 08:10 AM

135-year-old-grandmother-passed-away
சீனாவைச் சேர்ந்த 135 வயது பாட்டி அலிமிஹான் செயிட்டி (இடது).

பெய்ஜிங்: சீனாவின் மிக அதிக வயதான பெண் என்று கருதப்பட்ட 135 வயதான அலிமிஹான் செயிட்டி நேற்று காலமானார்.

சீனாவின் காஷ்கர் மாகாணத்திலுள்ள ஷூல் மாவட்டம், கோமுஜெரிக் கிராமத்தைச் சேர்ந்த அலிமிஹான் செயிட்டி 1886-ம் ஆண்டு ஜூன் 25-ம் தேதி பிறந்துள்ளார் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

2013-ம் ஆண்டு சீனாவின் முதுமையியல் மற்றும் முதியோர் மருத்துவ சங்கம் வெளியிட்ட முதியவர்கள் பட்டியலில் அலிமிஹான் செயிட்டி முதலிடம் பெற்றிருந்தார் என்று சீனாவின் ஜின்ஹுவா செய்தி நிறுவனம்தெரிவித்துள்ளது. கடந்த வியாழக்கிழமை உயிரிழந்த செயிட்டி, தனது வாழ்நாள் முழுவதும் எளிமையான, வழக்கமான வாழ்க்கை முறையை மேற்கொண்டு வாழ்ந்து வந்துள்ளார்.

குறிப்பிட்ட நேரத்துக்கு உணவு சாப்பிட்டு, வீட்டின் முற்றத்தில் நின்றவாறு சூரிய ஒளியைப் பெறுவதை அவர் வாடிக்கையாகக் கொண்டிருந்ததாகவும், சில நேரங்களில் அவரதுகொள்ளுப் பேரப் பிள்ளைகளை பராமரிப்பதற்கு அவர் உதவிபுரிந்ததாக வும் அந்தச் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.





Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published.