Share on Social Media


ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் நேற்று (டிச. 6) இந்தியாவுக்கு வருகை தந்திருந்தார். பிரதமர் மோடியும், ரஷ்ய அதிபர் புதினும் பல்வேறு பிரச்னைகள் குறித்து ஆலோசனை நடத்தினர். இந்தச் சந்திப்பின் சிறப்பம்சமாக, இரு நாடுகளுக்குமிடையே 5,000 கோடி ரூபாய் மதிப்பிலான பாதுகாப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இந்தப் பாதுகாப்பு ஒப்பந்தத்தில், ஏ.கே-203 ரக துப்பாக்கிகளும், எஸ்-400 ரக ஏவுகணை கருவிகளும்தான் பெரும் கவனம் பெற்றிருக்கின்றன. இந்த இரண்டு அதிநவீன ஆயுதங்களை ரஷ்யாவிடமிருந்து இந்தியா கொள்முதல் செய்யவிருப்பது சீனாவைக் கடுப்பேற்றியிருப்பதாகவும் சில செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. அப்படி இந்த இரண்டு ஆயுதங்களிலும் என்ன ஸ்பெஷல் இருக்கிறது என்பதை இந்தக் கட்டுரையில் காணலாம்!

ஏ.கே-203 ரைஃபிள்!

புகழ்பெற்ற ஏகே-47 துப்பாக்கிகளை முதன்முதலாக உருவாக்கிய ரஷ்யாதான், இந்த ஏ.கே-203 ரகத் துப்பாக்கிகளையும் தயாரித்திருக்கிறது. முதலில், ஏ.கே-103 என்ற பெயரில் தயாரிக்கப்பட்ட இந்த துப்பாக்கியில், 2018-ம் ஆண்டு சில மேம்பாடுகளைச் செய்தார் ரஷ்ய விஞ்ஞானி மிக்கெயில் கலாஷ்நிக்கோவ். அதன் பிறகு ஏ.கே-203 என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு, பயன்பாட்டுக்குவந்தது.

புதின் - மோடி

புதின் – மோடி

இந்த துப்பாக்கியிலிருக்கும் தோட்டாக்கள், முந்தைய துப்பாக்கி தோட்டாக்களைவிட பெரியதாக இருக்கும். அதனால் அதிக வெடிமருந்துகளைத் தாங்கிச் செல்லக்கூடியதாக இந்தத் தோட்டாக்கள் இருக்குமென்கிறார்கள். பழைய துப்பாக்கிகளின் தோட்டாக்கள் 5.56 மி.மீ அளவு கொண்டவை. ஆனால், ஏ.கே-203 ரைஃபிளிலுள்ள தோட்டாக்கள், 7.62 மி.மீ அளவு கொண்டது. இந்த ரக துப்பாக்கிகளிலிருந்து வெளிவரும் தோட்டாக்கள், 300 மீட்டர் வரை பாய்ந்து துல்லியமாக இலக்கை எட்டக்கூடியவை. எடை குறைவானதாகவும், நீடித்து நிலைத்து நிற்கக்கூடியதாகவும் ஏ.கே-203 ரைஃப்பிள்கள் இருக்குமென்கிறார்கள் ஆயுத ஆராய்ச்சியாளர்கள். இந்த ரக ரைஃபிள்களை பராமரிப்பதும் எளிது எனச் சொல்லப்படுகிறது.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *