Share on Social Media


புதுடில்லி: சி.பி.எஸ்.இ., மாணவர்கள், பெற்றோர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.

நம்நாட்டில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்ததை அடுத்து, மாணவர்களின் நலன் கருதி சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 பொதுத் தேர்வு கடந்த ஜூன் 1-ம் தேதி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. பொதுதேர்வு குறித்து மாணவர்கள், பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள கவலையை போக்கவும், மாணவர்களின் நலன் மற்றும் பாதுகாப்பு கருதியே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

இந்நிலையில் தேர்வு எழுதவிருந்த மாணவர்கள் , அவர்களது பெற்றோர்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் இன்று பிரதமர் மோடி கலந்துரையாடினர்.
இந்த உரையாடலின் போது சில மாணவர்கள் ,பெற்றோர்கள் பிரதமர் எடுத்த முடிவை வரவேற்றனர்.

Advertisement



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *