Share on Social Media


அந்த வகையில், எட்டாம் வகுப்பு சி.பி.எஸ்.இ பாடப்புத்தகத்தில், சர்ச்சைக்குரிய வகையில் திருவள்ளுவரின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. இதில், திருவள்ளுவர் காவி உடை அணிந்து, தலையில் முடியில்லாது ஒரு சிறிய குடுமியுடன், நெற்றியில் திருநீறு பூசி, ருத்ராட்ச மாலை அணிந்திருப்பது போல படம் இடம்பெற்றுள்ளது. இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இது குறித்து தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக ட்விட்டரில், “சி.பி.எஸ்.இ 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான புத்தகம் ஒன்றில் அய்யன் திருவள்ளுவருக்கு ஆரிய அரிதாரம்! பா.ஜ.க அரசு அனுமதிக்கிறது; அடிமை அ.தி.மு.க. அரசு வேடிக்கை பார்க்கிறது. ஆரிய வித்தைகளை எம் தமிழர் பண்பாட்டில் காட்ட எத்தனித்தால் தமிழகம் ஏற்காது; மானமுள்ள தி.மு.க. பொறுக்காது. எச்சரிக்கை!” என்று தெரிவித்திருக்கிறார். மேலும், பல தரப்பில் இருந்து தொடர் எதிர்ப்புகள் எழுந்து வருகின்றன.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *