Share on Social Media


சாதி ரீதியான பல்வேறு விமர்சனங்கள் மற்றும் சர்ச்சைகளுக்கு மத்தியில், பெரும் வெற்றிகண்ட `தேவர் மகன்’ பல மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது. சிவாஜி, கமல்ஹாசன், இளையராஜா, பரதன், பி.சி.ஶ்ரீராம் போன்ற ஆளுமைகளுக்கு மத்தியில் பஞ்சவர்ணமாகக் கவனம் பெற்ற ரேவதி, அந்தப் படத்துக்காகத் தேசிய விருதையும் வென்றார். அந்தக் கதாபாத்திரத்தில் நடிகை மீனா ஒருநாள் மட்டுமே நடித்த நிலையில், சில காரணங்களால் அவருக்குப் பதிலாக ரேவதி தேர்வானார். இந்திப் படத்தின் படப்பிடிப்பிலிருந்த ரேவதியிடம், `தேவர் மகன்’ நாஸ்டால்ஜியா நினைவுகள் குறித்துப் பேசினோம்.

'தேவர் மகன்' குழுவினர்...

‘தேவர் மகன்’ குழுவினர்…

“கொல்கத்தாவுல மலையாளப் பட ஷூட்டிங்ல இருந்தேன். ஒருநாள் எனக்கு போன் செஞ்ச டைரக்டர் பரதன் சார், `என்னோட படத்துல ஒரு ரோல் இருக்கு. கிராமத்து சப்ஜெக்ட். நீ நடிச்சா நல்லாயிருக்கும். உடனே வரணும்’னு சொன்னார். ஏற்கெனவே அவரோட ரெண்டு படங்கள்ல வேலை செஞ்சிருந்தேன். அவர் மேல எனக்கிருந்த நம்பிக்கையில, மறுபேச்சு சொல்லாம, கதை என்னனுகூட கேட்காம, சம்மதம் சொன்னேன். அப்போ நான் நடிச்சுகிட்டிருந்த மலையாளப் படத்தின் டைரக்டரான ப்ரியதர்ஷன் சார்கிட்ட, பரதன் சாரே பேசி சம்மதம் வாங்கினார். உடனடியா அங்கிருந்து புறப்பட்டு பொள்ளாச்சிக்கு வந்தேன்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *