IMG 20200930 WA0052 Tamil News Spot
Share on Social Media

சத்யபிரியா பெற்ற மதிப்பெண்கள் 138/180. இதனால் மாணவியின் புகைப்படத்துடன்கூடிய அஞ்சல் தலையை சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் வெளியிட்டு மாணவியைக் கெளரவப்படுத்தியுள்ளார். இது அரசுப் பள்ளி மாணவர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாவட்ட ஆட்சியர் தந்த ஊக்கத்துக்கு மிக்க நன்றி” என்றனர்.

அரசுப் பள்ளி  மாணவர்களை பாராட்டும் ஆட்சியர்

அரசுப் பள்ளி மாணவர்களை பாராட்டும் ஆட்சியர்

பள்ளி ஆசிரியர்கள் மட்டும் அல்லாது கிராம மக்களும் சத்யபிரியாவை பாராட்டி வருகின்றனர். சத்யபிரியாவிடம் பேசினோம்.

“தேசத் தலைவர்கள் புகைப்படம் உடைய தபால்தலையை பயன்படுத்தியிருக்கேன். இப்போ என் படம் உள்ள தபால்தலையைப் பார்க்கும்போது ஆச்சர்யமாவும் பெருமையாவும் இருக்கு. என் படிப்புக்கும் முயற்சிக்கும் கூடுதல் ஊக்கம் கிடைச்சிருக்கு” என்றார் மகிழ்ச்சியுடன்.

”அரசுப் பள்ளி மாணவர்களுக்குக் கிடைக்கும் இதைப் போன்ற ஒவ்வோர் அங்கீகாரமும், அரசுப் பள்ளியின் நிலையை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல உதவியாக இருக்கும்” எனச் சமூக ஆர்வலர்கள் மகிழ்ச்சி தெரிவிக்கிறார்கள்.

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *