Share on Social Media


ஆக்கிரமிக்கப்பட்ட கோயில் நிலத்தில் எப்படி மின் இணைப்பு கொடுக்கப்பட்டது என்பதை, நிலம் அமைந்திருக்கும் காஞ்சிரங்கால் ஊராட்சியின் தலைவர் மணிமுத்துவிடம் கேட்டோம், “கட்டடம் கட்டுவதற்கு முன்பாக தற்காலிக மின் இணைப்பு பெறுவதற்கும் அதன் பின்பு ப்ளான் அப்ரூவல் பெற்று கட்டடம் கட்டுவதற்கும் எங்களிடம் எந்த அனுமதியும் பெறவில்லை.

நான் பொறுப்புக்கு வருவதற்கு முன் சிறப்பு அதிகாரிகள்தான் ஊராட்சி நிர்வாகங்களை கவனித்து வந்தார்கள். அந்த காலகட்டத்தில் தமறாக்கியை சேர்ந்த அய்யனார் மகன் சரவணன் என்பவர் காமராஜர் காலனியிலுள்ள ஒரு வீட்டுக்கு வரி ரசீது போட்டு வாங்கியிருக்கிறார். அந்த வீட்டு வரி ரசீதுக்கான இடம் பைபாஸ் ரோட்டுக்கு அந்த பக்கம் உள்ளது.

மணிமுத்து

மணிமுத்து

ஆனால், இந்த பக்கமுள்ள இந்த ஆக்கிரமிப்பு இடத்துக்கு அந்த ரசீதை கொடுத்துதான் மின் இணைப்பு பெற்றிருக்கிறார்கள். இதையெல்லாம் மின்வாரியத்தினர் அப்போதே ஆய்வு செய்திருக்க வேண்டும். சாமனியர்கள் மின் இணைப்பு கேட்டால் ஆயிரம் கேள்வி கேட்பார்கள். அமைச்சருக்கு வேண்டப்பட்டவர்கள் என்பதால் எதையும் விசாரிக்காமல் விட்டுவிட்டார்கள். அதன் பிறகுதான் தேர்தலில் வெற்றி பெற்று பொறுப்புக்கு வந்தேன்.

இந்நிலையில்தான், ஒருநாள் இரவு, போலிஸ் பாதுகாப்போடு அந்த இடத்தை சுத்தி அமைச்சர் ஆட்கள் கம்பி வேலி போடுறதா மக்கள் என்னிடம் சொன்னாங்க. அது அவர் இடமா இருக்கும்னு ஆரம்பத்தில் நினைச்சோம், ஆனாலும் சந்தேகம் வந்து வி.ஏ.ஓ மூலமாக கிராம ஆவணங்களை எடுத்து பார்த்தால் அது கோயில் இடமுன்னு தெரிய வந்துச்சு.

அதுக்குள்ள செங்கல் சிமெண்டுன்னு இறக்க ஆரம்பிச்சாங்க. அங்கு எந்த வேலையும் செய்யக்கூடாதுன்னு ஊராட்சி ஊழியர்களும், நாங்களும் நேர்ல போய் எச்சரித்தோம். அப்ப இடத்துக்கு சொந்தமானவங்களோ, எஞ்சினியரோ யாரும் அங்கு இல்லை. அதோடு, வேலையை தொடரக்கூடாது, ஊராட்சிக்கு வந்து பார்க்க சொல்லுங்கன்னு அங்க வேலை செய்றவங்ககிட்டே கடிதம் கொடுத்துட்டு வந்தோம்.

அதோடு அறநிலையத்துறையின் கொல்லங்குடி இ.ஓ.விடம் தகவல் சொன்னேன். அவர் மூலமா போலிஸில் புகார் கொடுத்தோம். அடுத்ததா மின்வாரியத்துல போய் எப்படி இணைப்பு கொடுத்தீங்கன்னு கேட்டோம், அதற்கு அவங்க தமறாக்கி அய்யனார் மகன் சரவணன்ங்கிறவர்தான் இணைப்பு வாங்கியிருக்கார்னு சொன்னாங்க.

யாரு இந்த சரவணன்னு அந்த ஊரில் போய் விசாரிச்சோம். அப்படி யாரும் இல்லன்னு சொன்னாங்க. அதோட ஈ.பி.-ல கொடுத்திருந்த அந்த முகவரிக்கு பதிவு தபால்ல நோட்டீஸ் அனுப்பினோம். அதுவும் திரும்பி வந்துடுச்சு. அதோடு மின் இணைப்பை டிசி பண்ண சொல்லி ஈ.பி.க்கு லட்டர் அனுப்பினேன்.

சுருக்கமா சொல்லனும்னா சம்பந்தப்பட்ட இடத்துக்கு ரசீதும் நாங்க கொடுக்கல. பிளான் அப்ரூவலும் கொடுக்கல. ஆனால், அமைச்சர் தலையிட்டதால் அதிகாரிகள் இதை செஞ்சு கொடுத்துள்ளார்கள். இந்த இடம் கோயில் இடம்னு தெரிஞ்சும் இவ்வளவு பெரிய கட்டுமானத்தை யார் பண்றாங்கன்னு வி.ஏ.ஓ மூலம் எஸ்.எல்.ஆர் காப்பி, ஏ ரிஜிஸ்டரை செக் பண்ணினால் குமரன், கண்ணன்னு ரெண்டு பேர் வந்தது.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *