Share on Social Media


கேரள மாநிலத்தைச் சேர்ந்த சினிமா இயக்குநரும், தயாரிப்பாளருமான ஆண்டனி ஈஸ்ட்மேன் (75) மாரடைப்பு காரணமாக திருச்சூரில் நேற்று மரணமடைந்தார். போட்டோகிராபரான ஆண்டனி ‘ஈஸ்ட்மேன்’ என்ற ஸ்டுடியோ வைத்திருந்தார். இதையடுத்து அவர் ஆண்டனி ஈஸ்ட்மேன் என அழைக்கப்பட்டார். இவர்தான் நடிகை சில்க் ஸ்மிதாவை சினிமாவுக்கு அறிமுகப்படுத்தினார். இவரைப் பற்றி சில்க் ஸ்மிதா பேட்டிகளில் அடிக்கடி கூறியுள்ளார்.

சில்க் ஸ்மிதாவை சினிமாவில் அறிமுகப்படுத்தியது குறித்து ஒருமுறை ஆண்டனி ஈஸ்ட்மேன் கூறியிருந்தார், “எதிர்பாராதவிதமாக நான் சினிமா இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் வந்தேன். காரணம் அடிப்படையில் நான் ஸ்டில் போட்டோகிராபர். அன்று நான் கலூர் டென்னிசன், ஜான் பால் ஆகிய நண்பர்களைச் சந்தித்தேன். ஜான் பாலும் நானும் ‘இணையைத் தேடி’ என்ற கதையை உருவாக்கினோம். அதற்கு ஷோபா-வை நாயகியாக நாங்கள் நினைத்து வைத்திருந்தோம். அவர் மரணமடைந்ததால் புதிய கதாநாயகியை நடிக்க வைக்கலாம் எனத் தீர்மானித்தோம்.

சில்க் ஸ்மிதா

சில்க் ஸ்மிதா

அன்று கோடம்பாக்கத்தில் சினிமாவில் நடிப்பதற்காக பிள்ளைகளுடன் அங்கு வந்து தங்கியிருந்த நிறைய குடும்பங்கள் உண்டு. அதில் பல வீடுகளில் சென்று பார்த்தேன். மேக்கப் போடக்கூடாது என்று ஏற்கெனவே சொல்லியிருந்தோம். நான் கேமராவுடன் சென்றேன். ஆனால் எல்லோரும் கேமராவுக்கு போஸ் கொடுக்க மேக்கப்புடன் வந்தார்கள். இதனால் ஏமாற்றத்துடன் நாங்கள் வெளியே வந்தபோது, பக்கத்தில் உள்ள வீட்டில் ஒரு பெண் இருப்பதாகச் சொன்னார்கள்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *